முந்தய பக்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை உரிமையே! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

3 Dec 2025, 2:59 pm
மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை உரிமையே! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
<p><strong>மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை உரிமையே! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு</strong></p> <p>சென்னை, டிச. 3 - உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதன்கிழமை (டிச. 3) அன்று நடைபெற்றது. இந்த விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை தமிழகம் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகளுக்காக 60-க்கும் மேற்பட்ட அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் கூறிய அவர், அரசு இல்லங்களில் தங்கிப் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். &ldquo;மாற்றுத் திறனாளிகள் வெறும் பயனாளிகளாக இல்லாமல் மக்கள் பிரதிநிதிகளாக மாறப்போகிறீர்கள். மனுக்கள் அளிக்காமல் இனி மனுக்களைப் பெறப்போகிறீர்கள்,&rdquo; என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram