முந்தய பக்கம்

பறந்தேகுவோம்!

8 Mar 2026, 3:42 pm
                   பறந்தேகுவோம்!
<p><strong>பறந்தேகுவோம்!</strong></p> <p>கூண்டடைபட்டோரின் கோரிக்கை தாங்கி வந்து விழுகிறது எதிர்வீட்டு பால்கனியிலிருந்து மரகத நிற இறகு.. தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடுமிவள் இதுகண்டு என்ன செய்குவாள் பட்சியே? உமக்கு சிறகு எமக்கு கவிதை கூண்டின் கம்பிகள் உடையும்வண்ணம் சிறகுகளைப் பலப்படுத்துவோம் சிறகசைத்தலின் பொருட்டு - கூண்டின் சுவர் மோதி செத்தாலும் பறக்க எத்தனிப்பதை நிறுத்திடோம் கூடடைந்து வாழ்தனினும் பறத்தலில் பாறை மோதிச் சாவது மேல்! பறந்தேகுவோம் உன் சிறகொன்றில் - என் இந்த இறகினையும் சேர்த்துக் கொள்!</p>
Share
FacebookXWhatsAppTelegram