எலவனாசூர்கோட்டை பகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரே வாரத்தில் தீர்வு! அதிகாரிகள் வாக்குறுதியால் போராட்டம் ஒத்திவைப்பு
17 Dec 2025, 4:11 pm
<p><strong>எலவனாசூர்கோட்டை பகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரே வாரத்தில் தீர்வு! அதிகாரிகள் வாக்குறுதியால் போராட்டம் ஒத்திவைப்பு</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, டிச.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்பில் எலவனாசூர்கோட்டை பகுதி மக்க ளின் அடிப்படை பிரச்சனைகளுக்கு பல போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை,வட்டார வளர்ச்சி அதிகாரிகளை கண்டித்து உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் (டிச.17) புதனன்று வருவாய் வட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை வட்டம், பரமேஸ்வரிமங்கலம், எ.புதூர் பூம்பூம் மாட்டுக் காரர்களுக்கு வழங்கப்பட்ட பட்டா இடத்தை அளந்து அத்துக்காட்டிடடவும், கூத்தனூர் கிராமத்தில் வழங்கப்பட்ட பட்டாவை கிராம கணக்கில் பதிவு செய்திட வலியுறுத்தப்பட்டது. உளுந்தூர்பேட்டை ஒன்றியம் காட்டு எடையார்,கூத்தனூர், எ.புதூர், கிராமங்க ளில் நிலவும் குடிநீர் பிரச்சனைகளை போக்கிட வேண்டும், அரசு உயர்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் கட்டுமான பணியை உடனே முடிக்க வேண்டும். கூத்தனூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைகளை விசாரித்த உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கோரிக்கைகள் அனைத்தையும் ஒரு வார காலத்திற்குள் விரைந்து முடித்து தருவதாக கூறியதன் அடிப்படையில் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் வி.ரகுராமன்,முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் கே.ரங்கதுரை, எம்.கண்ணன், கே.அஞ்சலை, ஜி.ஆதி லட்சுமி, கே.விஜய், பி.பெரியசாமி, ஏ.ஏழு மலை, கிராம பொதுமக்கள் மற்றும் எலவனாசூர்கோட்டை காவல்துறை யினர்,கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
