தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தகுதியின் மரணமும்! இந்திய உயர்கல்வி நிறுவனங்களும் - கே. சாமுவேல் ராஜ்

23 Feb 2026, 5:35 pm
தகுதியின் மரணமும்! இந்திய உயர்கல்வி நிறுவனங்களும் -  கே. சாமுவேல் ராஜ்
<p><strong>தகுதியின் மரணமும்! இந்திய உயர்கல்வி நிறுவனங்களும்</strong></p> <p>இந்தியாவின் மிக உயர்ந்த மருத்துவக் கல்வி நிறுவனமாகக் கருதப்படுகிற எய்ம்ஸ் (AIIMS)-ல் மருத்துவர் &nbsp;பட்டம் பெறுவதற்கு இன்னும் சில மாதங் களே எஞ்சியிருந்தன. வறுமை சூழ்ந்த &nbsp;நிலையிலும் பல ஆயிரம் ரூபாய்களுக்குச் சில தினங்களுக்கு முன்புதான் புத்த கங்கள் வாங்கி இறுதித் தேர்வுக்குத் &nbsp;தயாராகிக் கொண்டிருந்தான் பால் முகுந்த் &nbsp;பாரதி. ஆனால், கடுமையான மன உளைச்சல் காரணமாக அடுத்தடுத்த தினங்களில் அவன் மேற்கொண்ட தற்கொலை &nbsp;முயற்சிகளில், அவன் இறுதியில் மரித்தே போனான். அவனது மன உளைச்சலுக்குக் காரணம் சாதிக்கொடுமை. அவனது தகுதியே &nbsp;அவனது உயிருக்குப் பகையானது. நிழலாய் தொடர்ந்த சாதியப் பாகுபாடு மத்தியப் பிரதேசத்தின் பண்டேல்கண்ட் பகுதியில் உள்ள கிராம்கர் எனும் சிற்றூரில் பட்டியலினக் குடும்பத்தில் பிறந்தவன் பால் முகுந்த் பாரதி. உயர்கல்விச் சேர்க்கைக்காக ஒரே ஆண்டில் எய்ம்ஸ், ஐ.ஐ.டி. (IIT) மற்றும் சி.பி.எம்.டி. (CPMT) ஆகிய நுழைவுத் தேர்வு களில் வெற்றி பெற்றான். அவனது இந்த அறிவுத்திறன் பாராட்டப்படுவதற்கு மாறாகப் பகையாகப் பார்க்கப்பட்டது. அவனைச் சாதியப் பாரபட்சங்கள் நிழல் போல் துரத்தின. அவனது சொந்தத் துறையில் மட்டு மல்லாமல், தங்கும் விடுதியிலும், உணவுக் கூடத்திலும் இது தொடர்ந்தது. வகுப்பில் திட்டமிட்டே பின்வரிசையில் உட்கார வைக்கப் பட்டான். தங்கும் விடுதியின் கதவுகளில் மிக அருவருக்கத்தக்க வார்த்தைகள் ஏறக் குறைய தினமும் எழுதப்பட்டன. அறைக்குள் இருக்கும்போதே வெளியில் கதவைப் பூட்டிச் சில தினங்கள் வரை திறந்து விடாமல் இருப்பது, விளையாட்டு மைதானத்தில் இழிவு படுத்துவது என அவனது வாழ்வு சித்திரவதை யானது. இதைவிடக் கொடுமை, உள்ளகத் தேர்வுகளில் (Internal) தொடர்ச்சியாகக் குறைந்த மதிப்பெண் தந்து வதைத்தது. திருப்பிய திசையெங்கும் கொடிய பற்களுடன் சாதி கடித்துக் குதற, மருத்துவராக வேண்டிய கல்லூரியிலேயே பிணவறையில் கிடத்தப் பட்டான் பால் முகுந்த் பாரதி. இந்தக் கொடுமை &nbsp;2010, மார்ச் 30 அன்று நடந்தது. தோரட் குழுவும் நிர்வாகத்தின் முட்டுக்கட்டையும் இத்தனைக்கும் இதற்குச் சில ஆண்டுகள் முன்புதான் (2007, மே 5) எய்ம்ஸ்-ல் நிலவி வந்த சாதிப் பாகுபாடுகளை ஒழிப்பதற்கான விதிமுறைகளைப் பேராசிரியர் எஸ்.கே. &nbsp;சுகதேவ் தோரட் தலைமையிலான மூவர் &nbsp;கமிட்டி வழங்கியிருந்தது. இந்திய ஒன்றிய &nbsp;அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல &nbsp;அமைச்சகத்தால் இக்குழு நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுகதேவ் &nbsp;தோரட் அவ்வளவு எளிதாக இந்தப் பரிந்துரை களை உருவாக்கிட முடியவில்லை. காரணம், அன்று எய்ம்ஸ் இயக்குநராக இருந்த பி. வேணுகோபால் இக்குழுவிற்கு எதிராகவே செயல்பட்டார். எந்த ஒத்துழைப்பும் தர மறுத்த தால், வளாகத்திற்கு வெளியேதான் விசார ணையை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. சுகதேவ் தோரட் குழுவின் முன்பாகச் சாட்சியம் அளித்த மாணவர்கள், ஆசிரியர் களின் ஒத்துழைப்பு கிடைக்காதது தங்களது கற்றல் மற்றும் மனநலத்தைப் பாதிப்பதாகக் கூறினர். இதுவே மாணவர்களின் தொடர் &nbsp;தோல்விக்கு வழிவகுக்கிறது என்பது ஆதாரங் களுடன் சுட்டப்பட்டது. பாகுபாடுகளைக் களைவதற்காக முன்மொழியப்பட்ட எதனை யும் எய்ம்ஸ் நிர்வாகம் கடைப்பிடிக்கவில்லை. இதன் விளைவாகவே பால் முகுந்த் பாரதி தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தது. அமைதியாகச் சடலத்தைப் பெற்றுச் சென்ற தைத் தவிர வேறெதுவும் அவனது பெற்றோர் களால் செய்திட முடியவில்லை. ரோஹித் வெமுலாவின் தியாகமும் புதிய விதிகளும் இந்த வரிசையில் நிகழ்ந்த தற்கொலை களில் இந்தியாவையே உலுக்கியது 26 &nbsp;வயது ரோஹித் வெமுலாவின் மரணம். இது &nbsp;உயர்கல்வி நிறுவனத்தின் &lsquo;படுகொலை&rsquo; என்றே வகைப்படுத்தப்பட்டது. 2016, ஜன வரி 17 அன்று ஹைதராபாத் மத்தியப் பல் கலைக்கழகத்தில் நடந்த ரோஹித் வெமுலா வின் தற்கொலையைத் தொடர்ந்து, உயர் கல்வி நிலையங்களில் பாகுபாடுகளுக்கு எதி ராக &lsquo;ரோஹித் வெமுலா சட்டம்&rsquo; இயற்றப்பட வேண்டுமென்று வலுவான போராட்டங்கள் எழுந்தன. இந்நிலையில் தான், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உயர் கல்வி நிறுவ னங்களில் சமத்துவத்தை உருவாக்கும் &lsquo;யுஜிசி சமத்துவ விதிமுறைகள் 2026&rsquo; (UGC &nbsp;Equity Regulations, 2026) ஒன்றை அறி முகப்படுத்தியது. 2012-ம் ஆண்டின் விதி முறைகளை மாற்றி, கடுமையான நடவடிக்கை களைக் கொண்டு வர இது முயன்றது. இதில் பாகுபாடு தடுப்புக் குழுக்கள், சமத்துவ அலுவலர் நியமனம், சமத்துவத்தைப் பாடத் திட்டத்தில் இணைப்பது, ஆசிரியர்களுக்கான கட்டாய வழிகாட்டல் பயிற்சி மற்றும் விதி மீறல்களுக்கு நிதி அபராதம் போன்ற அம்சங் கள் இடம்பெற்றன. எதிர்ப்புகளும் நீதிமன்றத் தடையும் ஆனால் மறுமுனையில், இதற்கு எதிராக பெரும் கொந்தளிப்புகள் மற்றும் எதிர்ப்புப் &nbsp;போராட்டங்கள் மாணவர்கள் மத்தியில் தூண்டிவிடப்பட்டன. இது பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எதிரான &lsquo;மறுமுனைப் பாகு பாடு&rsquo; (Reverse Discrimination) என்றும், &nbsp;ஆசிரியர்களைக் குறிவைக்க இப்பரிந்துரை கள் தவறாகப் பயன்படுத்தப்படும் என்றும் எதிர்ப்பாளர்கள் வாதிட்டனர். சமத்துவத்தை ஏற்காத உயர்சாதி மாணவர் அமைப்புகள், ஏபிவிபி (ABVP) தலைமையில் டெல்லி, &nbsp;மும்பை போன்ற நகரங்களில் போராட்டங் களை நடத்தின. சமத்துவ விதிமுறைகளை அமல்படுத்தக் கோரிய இதர மாணவர் அமைப்புகள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சவர்ண இராணுவம் என்ற அமைப்பின் மாவட்டத் தலைவர் அபிஷேக் பாண்டே, இந்த மசோதாவை &ldquo;கருப்புச் சட்டம்&rdquo; என்று &nbsp;கூறித் தனது இரத்தத்தில் கடிதம் எழுதி னார். இந்நிலையில்தான், இந்திய உச்ச நீதிமன்றம் 2026, ஜனவரி 29 முதல் இவ்விதி முறைகள் அமல்படுத்தப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. நீதிக்கான போராட்டக் களம் இந்திய மாணவர் சங்கம், தலித் மாணவர் அமைப்புகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் சமத்துவ வழிகாட்டல்களை மீண்டும் கொண்டு வரப் பேரணிகள் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாகவே, 24.02.26 அன்று மாலை 4 மணியளவில் சென்னை சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி, தமுஎகச சார்பில் &lsquo;ரோஹித் வெமுலா சட்டம்&rsquo; இயற்றிடக் கோரிச் சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. தகுதியின் பெயரால் தற்கொலை களுக்குத் தள்ளப்படும் மாணவர்களின் உரி மையை மீட்கும் இப்போராட்டம் தொடரும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.