தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆன்மீகத்தின் போர்வையில் அரசியல் ஈஷா மையத்தின் இருண்ட பக்கங்கள்

16 Feb 2026, 2:37 pm
ஆன்மீகத்தின் போர்வையில் அரசியல் ஈஷா மையத்தின் இருண்ட பக்கங்கள்
<p><strong>ஆன்மீகத்தின் போர்வையில் அரசியல் ஈஷா மையத்தின் இருண்ட பக்கங்கள்</strong></p> <p>ஜக்கி வாசுதேவ் போன்ற நவீன போலிச் சாமி யார்கள் இளைஞர்களைக் கவர்வ தற்காகப் பயன்படுத்தும் முதன்மை யான ஆயுதம் &ldquo;விஞ்ஞான வேடம்&rdquo;. சிவராத்திரி என்பது ஒரு வானியல் நிகழ்வு என்றும், அன்று கோள்கள் விசித்திரமாகச் செயல்படுவதால் பிரபஞ்ச சக்தி பூமியில் இறங்கு கிறது என்றும் அவர் கூறுவது எந்த ஒரு அறிவியல் ஆய்விலும் நிரூ பிக்கப்படாத ஒன்று. புராணங்களை அதன் போக்கிலேயே சொல்லத் துணி வில்லாதவர்கள், நவீன இளைஞர் களை மூளைச்சலவை செய்ய அறி வியலைத் தவறாகப் பயன்படுத்து கிறார்கள். இது அறிவியலுக்கு இழைக்கப்படும் துரோகம். மதச்சார்பின்மையை சிதைக்கும் அரசியல்-ஆன்மீக கூட்டணி &nbsp;இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அடையாளப்படுத்துகிறது. அரசு அனைத்து மதங்களுக்கும் சமமான தூரத்தில் இருக்க வேண்டும். ஆனால், ஈஷா மைய விழாக்களில் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரும், முப்படைத் தள பதிகளும் பங்கேற்பது ஆரோக்கிய மான ஜனநாயகத்திற்கு அழகல்ல. &nbsp;பிப்ரவரி 15 ஞாயிறன்று இரவு ஜக்கியின் விழாவில் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், &ldquo;பயமற்ற தன்மை ஆன்மீகத்திலிருந்து வரும்.. இந்த பயமற்ற தன்மை உடலால் மட்டும் வராது. அது ஆன்மீகத்தில் இருந்து வரும்&rdquo; என பேசியது, தொழில் முறை ராணுவப் பயிற்சி மற்றும் தேசபக்தியை விட ஒரு தனிநபரின் போதனையே மேலானது என்ற பிம்பத்தை உருவாக்குகிறது. &nbsp;சர்ச்சைக்குரிய போலிச் சாமி யார், நாட்டின் மிக உயரிய பொறுப் பில் இருப்பவர்களுக்கு &lsquo;பவ்ய பாரத் பூசன்&rsquo; போன்ற விருதுகளை வழங்கு வதும், அதற்கு அவர்கள் பணிந்து &nbsp;நிற்பதும் சட்டத்தின் முன் அனை வரும் சமம் என்ற ஜனநாயகப் பண்பைக் கேள்விக்குறியாக்குகிறது. &nbsp;சட்டத்தை மதிக்காத ஆன்மீகம்: ஈஷா மீதான தொடர் சட்டமீறல்கள் &nbsp;யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாக ஈஷா மையம் மீது தொடர் புகார்கள் உள்ளன. இந்தியத் தலைமைத் தணிக்கையாளர் சமர்ப்பித்த அறிக் கையில், ஈஷா அறக்கட்டளை மலைப் பகுதி பாதுகாப்பு குழுமத்தின் (HACA) முறையான அனுமதி பெறாமல் 69,000 சதுர மீட்டர் பரப்பளவில் சட்ட விரோத கட்டுமானங்களை மேற் கொண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. &nbsp;இதற்காக இயற்கை ஆர்வலர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளை யில், சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய ஆட்சியாளர்களே அங்கு சென்று தஞ்சம் புகுவது, சாமானிய மக்க ளுக்குச் சட்டத்தின் மீதான நம்பிக்கை யைச் சிதைக்கிறது. &nbsp;பாஜகவின் அரசியல் - நிதி மையமாக மாறும் ஈஷா? &nbsp;ஆதியோகி சிலை திறப்பிற்கு பிரத மர் வருகை தந்தது முதல், 2026 சிவ ராத்திரிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் வருகை தந்தது வரை இவை யாவும் தற்செயலானவை அல்ல. ஈஷா மையம் தற்போது பாஜக வின் அரசியல் மற்றும் &lsquo;நிதி மேலா ண்மை&rsquo; மையமாக மாற்றப்பட்டு வரு கிறது என்ற அரசியல் செயற்பாட்டா ளர்களின் குற்றச்சாட்டுக்கு இச்சம்ப வங்கள் வலு சேர்க்கின்றன. &nbsp;ஆன்மீகம் என்பது தனிமனிதத் தேடல். ஆனால், அது அதிகாரத்தை கைப்பற்றவும், சட்டவிரோதச் செயல் களை மறைக்கவும், போலி அறி வியலைப் பரப்பவும் பயன்படுத்தப் படும்போது அது சமூகத்திற்கு ஆபத்தானது. புதிய தலைமுறை ஜக்கியின் சரளமான ஆங்கிலப் பேச்சைக் கண்டு வியக்காமல், அவர் பேசும் மூடநம்பிக்கைகளின் உண்மைத்தன்மையையும், அவர் மீதான சட்டப் புகார்களையும் தர்க்க ரீதியாக ஆராய வேண்டிய தருணம் இது. - அ.ர.பாபு</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.