தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை வீழ்த்திய நீதியின் மகுடம்

15 Feb 2026, 3:03 pm
அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை வீழ்த்திய நீதியின் மகுடம்
<p><strong>அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை வீழ்த்திய நீதியின் மகுடம்</strong></p> <p>வாச்சாத்தி ஆவணப் படம் வெளியீடு சென்னை, பிப். 15 &ndash; &nbsp;சென்னையின் அந்த ஆவணப்படம் திரையிடப்பட்ட அரங்கம் ஒரு நிசப்தமான போர்க்களமாக மாறியிருந்தது. 34 ஆண்டு களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட அரசப் பயங்கரவாதத்தின் வடுக்களைச் சுமந்துகொண்டு, அந்த வீரப் பெண்மணி கள் வந்திறங்கியபோது அங்கிருந்த அத்தனை விழிகளும் கசிந்தன. &nbsp;நீதிக்கான நீண்ட பயணம் &nbsp;காம்ரேட் டாக்கீஸ் தயாரிப்பில், ஆர்.ஜெ. பிரசாத் இயக்கம் மற்றும் இசையில் உருவான &lsquo;வாச்சாத்தி&rsquo; ஆவணப்பட வெளியீட்டு விழா சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்காக வாச்சாத்தி கிராமத்திலிருந்து அந்தப் பெண்மணிகள் ஒரு பேருந்து எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்திருந்த னர். அவர்களோடு, அந்த மக்களின் வாழ்நாள் போராட்டத் தோழர்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பி.டில்லிபாபு, தர்மபுரி மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன், ஏ.குமார் உள்ளிட்ட தலைவர்களும் உடன் வந்திருந்தனர். &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். திரையில் ஆவணப்படம் ஓடத் தொடங்கி யபோது, தியேட்டருக்குள் இருந்தவர்கள் ஒரு இருண்ட காலத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். வனத்துறையினரும், காவல்துறையினரும் ஒரு ஒட்டுமொத்த கிராமத்தை எப்படிச் சிதைத்தார்கள் என்ப தைக் காண்கையில், அரங்கத்தில் அமர்ந்திருந்த வாச்சாத்தி பெண்மணிகளின் &nbsp;விம்மல் சத்தம் மெல்லக் கேட்கத் தொடங்கியது. உறைந்து போன நொடிகள் ஆவணப்படம் முடிந்து, அந்த வீரப் பெண்மணிகளுக்குத் திரைக்கலைஞரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமலஹாசன் எம்.பி., நினைவுப் பரிசுகளை வழங்க மேடைக்கு அழைத்தபோதுதான் உச்சகட்ட நெகிழ்ச்சி அரங்கேறியது. 34 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு நேர்ந்த அந்தத் துயரச் சம்பவத்தின் நினைவுகள் நெஞ்சைக் கவ்வ, அந்தப் பெண்மணிகள் &nbsp;கண்ணீரோடு மேடை ஏறினர். அவர்களின் அழுகுரல் அங்கிருந்த பார்வையாளர்களைக் கவ்விப் பிடித்தது. ஒரு நிமிடம் அரங்கமே நிசப்தத்தில் உறைந்தது. உலகமே கொண்டாடும் ஒரு மகா &nbsp;கலைஞன், தன் கைகளால் அந்த எளிய மக்க ளின் கண்ணீரைத் துடைப்பது போன்ற அந்தத் தருணம், நீதிக்கான ஒரு நீண்ட நெடிய பயணத்தின் சமர்ப்பணமாக அமைந்தது. நீதிக்கான மகத்தான போராட்டம் நிகழ்வில் உரையாற்றிய வாச்சாத்தி போராட்டத் தள கர்த்தரான மலைவாழ் மக்கள் சங்க அன்றைய மாநிலத் தலைவரும் &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தற்போதைய மாநிலச் செயலாளரு மான பெ. சண்முகம், &ldquo;வாச்சாத்தி வன்கொடுமையை ஒரு சில மணிகளில் சொல்லித் தீர்த்துவிட முடியாது. 30 ஆண்டுகாலப் போராட்டத்தை, ஒரு குடுவைக்குள் அடைப்பதைப் போல 40 நிமி டங்களுக்குள் காம்ரேட் டாக்கீஸ் குழுவினர் நேர்த்தியாக ஆவணப்படுத்தியுள்ளனர். வாச்சாத்தி வழக்கின் வெற்றிக்கு அந்த கிராமத்து மக்கள்தான் அடிப்படை. ஆளும் கட்சியின் அடாவடி, அச்சுறுத்தல்கள் என &nbsp;அத்தனையையும் தாண்டி, 75 சாட்சி களும் நீதிமன்றத்தில் உண்மையைச் சொல்வதில் உறுதியாக இருந்தார்கள். இது ஏதோ ஒரு கிரிமினல் வழக்கு அல்ல; அரசாங்கத்திற்கும், வாச்சாத்தி கிராம மக்களுக்கும் இடையிலான மாபெரும் போர். 1991-96 காலக்கட்டத்தின் எதேச் சதிகாரப் போக்கை எதிர்த்து, செங்கொடி இயக்கத்தின் துணையோடு மக்கள் பெற்ற இந்த வெற்றி, தமிழக மனித உரிமைப் போராட்ட வரலாற்றின் மகுடம்.&rdquo; எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மாற்றத்திற்கான உந்துதல் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் பேசுகையில், &ldquo;வாச்சாத்தி நமக்கு ஒரு உந்துதலை வழங்குகிறது. காவல்துறையின் அராஜகத்தை ஒழிக்கச் செங்கொடி இயக்கத்தின் ஆதரவுத் தளம் இன்னும் வலுப்பெற வேண்டும்&rdquo; என்றார். இந்நிகழ்வில் காம்ரேட் டாக்கீசின் தினேஷ் வரவேற்க, ராம்குமார் நன்றி கூறினார். அருந்தமிழ் யாழினி நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். வாச்சாத்தி மக்கள் பேருந்து ஏறித் திரும்பும்போது, அவர்களின் கண்களில் 34 ஆண்டுகால வலி இருந்தாலும், தங்களைப் பாராட்ட கோடிக் கரங்கள் உள்ளன என்ற ஆறுதல் தெரிந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.