தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இ-பைலிங் முறை வழக்குத் தாக்கலை நீதிமன்றம் நிறுத்தி வைக்க வேண்டும்! தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண சிபிஎம் வலியுறுத்தல்

19 Dec 2025, 5:32 pm
இ-பைலிங் முறை வழக்குத் தாக்கலை நீதிமன்றம் நிறுத்தி வைக்க வேண்டும்! தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண சிபிஎம் வலியுறுத்தல்
<p><strong>இ-பைலிங் முறை வழக்குத் தாக்கலை நீதிமன்றம் நிறுத்தி வைக்க வேண்டும்! தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண சிபிஎம் வலியுறுத்தல்</strong></p> <p>சென்னை, டிச. 19 - &nbsp;உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தா மல் இ-பைலிங் முறையை அமல்படுத்தக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை &nbsp;விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது: கட்டாயமாக்கப்பட்ட &nbsp;இ-பைலிங் முறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களில் 01.12.2025 முதல் அனைத்து வழக்குகளையும் இ-பைலிங் முறையில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்பது, சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக உத்தரவின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. &nbsp;கடந்த ஆண்டு குற்றவியல் வழக்குகளில் காசோலை வழக்குகள் உள்ளிட்ட சில &nbsp;வழக்கு களை மட்டும் நீதிமன்றங்களில் தாக்கல் &nbsp;செய்ய இ-பைலிங் நடைமுறை அறிமுகப் படுத்தப்பட்டது. படிப்படியாக, அனைத்து வழக்குகளும் இ-பைலிங் முறையில் கொண்டு வரப்படும் என்று உயர் நீதிமன்றம் 2 ஆண்டு களுக்கு முன்னர் தெரிவித்தது. அதற்குள் உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் வலியுறுத்தின. போதிய கட்டமைப்பு &nbsp;வசதிகள் இல்லை இந்நிலையில் அனைத்து நீதிமன்றங்களி லும் போதிய உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தாமலேயே 01.12.2025 முதல் தாக்கல் செய்யப்படும் அனைத்து வழக்கு களையும், இ-பைலிங் முறையில் இணைய வழியில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ- சேவை மையங்களில் ஒரு வழக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் பல மணி நேரம் காத்து நிற்கும் சூழல் ஏற்பட்டிருப்பது டன், இதனால் வழக்கறிஞர்களின் அன்றாட பணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பலரும் இணையத்தை ஒரே நேரத்தில் பயன்படுத்துகின்ற சூழலில் இணைய இணைப்பும் கடுமையாக தடைபடு கிறது. இதனால் இ-பைலிங் செய்வதற்கு நீண்ட நேரம் செலவாகிறது. வழக்காடிகள் - &nbsp;வழக்கறிஞர்கள் பாதிப்பு மேலும், ஏற்கெனவே இ-பைலிங் நடை முறை ஒரு சில குற்றவியல் வழக்குகளில் &nbsp; நடைமுறையில் இருக்கிறது. அப்படி இ-பைலிங் மூலமாக தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகள் பல மாதங்கள் ஆகியும் நீதிமன்றத்தால் அவ்வழக்குகள் உடனடியாக நம்பர் செய்யப்படாமல் இருந்து வருவதாக வழக்காடிகளும், வழக்கறிஞர்களும் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் இ-பைலிங் &nbsp; மூலமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது, வழக்காடிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து நீதிமன்றங்களிலும் இதனை நடைமுறைப்படுத்த, இ-சேவை மையங்கள் இன்னும் முழுமையாக உருவாக்கப்பட்டு அதற்கான ஊழியர்கள் நியமிக்கப்படாத சூழலே பெருவாரியான நீதிமன்றங்களில் நிலவுகிறது. மேலும், இ-பைலிங் நடை முறை பல மாநிலங்களில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். &nbsp;தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் இ-பைலிங் நடைமுறையை கண்டித்தும், போதிய உள்கட்டமைப்பு இல்லாமல் அதை அமலுக்கு கொண்டு வந்துள்ளதை எதிர்த்தும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு அரசு இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு உயர்நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று &nbsp;சுமூகமாக தீர்த்திட நடவடிக்கை எடுக்க &nbsp;வேண்டும். வழக்காடிகளுக்கும், வழக்கறி ஞர்களுக்கும் பெரும் சிரமத்தையும், கால விரயத்தையும் ஏற்படுத்தி வரும் தற்போதைய இ-பைலிங் நடைமுறையை போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தா மல் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சென்னை உயர்நீதிமன் றத்தை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.