நாடும் உன்றன் பின்நடக்கும்!
4 Jul 2026, 9:15 pm
<p><strong>நாடும் உன்றன் பின்நடக்கும்! </strong></p><p>உதவி செய்யும் உள்ளம் இருந்தால் உலகம் உனக்கே உறவாகும்! பதவி கொண்டே பதுக்கு வோர்க்குப் பகலும் கூட இரவாகும்! வெள்ளம் போல அன்பைக் காட்டு விலங்கும் உனக்குத் துணையாகும்! உள்ளம் தன்னில் உயர்வைக் கூட்டு உயர்வான் உனக்கே இணையாகும்! முயற்சி தன்னை மூச்சில் ஏற்று முடியா(து) என்றே ஒன்றில்லை! அயர்ந்தால் வாழ்க்கை அற்றுப் போகும் அதனை ஏற்றல் நன்றில்லை! வைத்த அடியைப் பின்வாங் காதே வாகை நோக்கிப் போராடு ! தைத்த துன்பம் மலையென் றாலும் தாவிப் பிடுங்கு வேரோடு! ஏழை வாழ்வின் இருளைப் போக்கு எவர்க்கும் நீ தான் அரணாகும்! கோழை யோடுகூடி விடாதே கொள்கைக் கதுவே முரணாகும்! நல்ல செயலால் உன்னை நடத்து நாடும் உன்றன் பின் நடக்கும் வெல்லும் வழியை விரிவு படுத்து விண்மண் உன்றன்முன் கிடக்கும்!</p>
