தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சூயஸ் நிறுவனத்தின் அலட்சியம் ரூ.5லட்சம் அபராதம் விதித்த மாநகராட்சி

21 Jan 2026, 3:58 pm
சூயஸ் நிறுவனத்தின் அலட்சியம் ரூ.5லட்சம் அபராதம் விதித்த மாநகராட்சி
<p><strong>சூயஸ் நிறுவனத்தின் அலட்சியம் ரூ.5லட்சம் அபராதம் விதித்த மாநகராட்சி</strong></p> <p>கோவை, ஜன.21- தோண்டப்பட்ட சாலை பணி முடித்தும் மூடாமல் அலட்சியப்படுத்திய சூயஸ் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோவை மாநகராட்சி &nbsp;ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள் ளார். கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலை யில், கிழக்கு மண்டலம் 53 ஆவது வார்டுக்குட்பட்ட சவுரிபாளையம், ஜி.வி.ரெசிடென்சி பகுதிகளில் மாந கராட்சி ஆணையாளர் புதனன்று நேரில் ஆய்வு &nbsp;மேற்கொண்டார். அப்போது அங்கு சாலையோரங்க ளில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதைக் கண்டு அதி ருப்தியடைந்த ஆணையாளர், தூய்மைப் பணியில் மெத்தனமாகச் செயல்பட்ட தனியார் ஒப்பந்த நிறு வனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து அதிரடி காட்டினார். மேலும், அப்பகுதியில் குப்பைகளை &nbsp;உடனே அகற்றவும், சிசிடிவி கேமராக்கள் மூலம் &nbsp;கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். அதனைத் தொடர்ந்து மசக்காளிபாளையம் பகுதி யில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், 24 மணி &nbsp;நேர குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணிகள் &nbsp;முடிந்த பின்னர், தோண்டப்பட்ட சாலைகளைச் சீர மைக்காமல் முறையாக மூடாத சூயஸ் நிறுவனத்திற்கு &nbsp;5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பொதுமக்களுக்கு இடையூறாகப் பணிகளைத் தாமதப்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார். முன்னதாக, சவுரிபாளையம் சுகாதார ஆய்வா ளர் அலுவலகத்திற்கு சென்ற ஆணையாளர், தூய் மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்தார். பணியாளர்கள் முறையாகப் பணிக்கு வருவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி நகர்நல அலு வலர் மரு.மோகன், உதவி நகர்நல அலுவலர் மரு. பூபதி, கிழக்கு மண்டல உதவி ஆணையர் ராம்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.