தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேங்கிய குப்பையில் பற்ற வைக்கப்படும் நெருப்பு தொடரும் விபரீதத்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

12 Dec 2025, 4:54 pm
தேங்கிய குப்பையில் பற்ற வைக்கப்படும் நெருப்பு  தொடரும் விபரீதத்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்
<p><strong>தேங்கிய குப்பையில் பற்ற வைக்கப்படும் நெருப்பு &nbsp;தொடரும் விபரீதத்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்</strong></p> <p>திருப்பூர், டிச.12- திருப்பூரில் மலை போல் தேங்கியி ருக்கும் குப்பைகளை &nbsp;எரிப்பதால், சுகா தார சீர்கேட்டை மேலும் அதிகரிப்பது டன் புற்றுநோய் உட்பட பல்வேறு வித மான நோய் தாக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாநகராட்சியின் குப்பை பிரச்சனை தீர்வு காணப்படாத நெருக்க டியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. முறையான திடக்கழிவு மேலாண்மை &nbsp;திட்டம் நீண்ட காலமாக நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. சேகரிக்கப் படும் குப்பையை நகரிலும், சுற்று வட் டார கிராமப்புறங்களிலும் உள்ள காலா வதியான பாறைக்குழிகளில் கொட்டும் &nbsp;நடைமுறையை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து செய்து வந்தது. சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுநல அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் அமைப்பு ரீதியாக அணி திரண்டு, கிராமப்புறங்களில் குப்பை &nbsp;கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். அத்துடன் சட்டரீதியாகவும் நீதி மன்றத்தை அணுகி உள்ளனர். &nbsp;இத்தகைய எதிர்ப்பு வலுப்பட்டு உள்ள நிலையில், குப்பை பிரச்ச னையை கையாள முடியாமல் மாநக ராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை முறை யாக செயல்படுத்த காலம் கடந்து தற் போது முயற்சியை தொடக்கி உள்ளது. அத்துடன் திடக்கழிவு மேலாண்மையை &nbsp;ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வும் முனைந்துள்ளது. &nbsp;இந்நிலையில், ஏறத்தாழ 40 ஆயி ரம் டன் குப்பை அப்புறப்படுத்த முடியா மல் நகரம் முழுவதும் வீதிகளில், தேங்கி &nbsp;கிடக்கிறது. நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்த நிலை யில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள &nbsp;குப்பையில் தீ வைத்து எரிப்பது சமீப நாட்களாக அதிகரித்துள்ளது. இதிலி ருந்து கிளம்பும் புகை மண்டலம் மூச்சுத் திணற வைக்கிறது. &nbsp;மாநகராட்சி நிர்வாகம் இப்பிரச்ச னையில் திணறி வரும் நிலையில், விஷ மிகள் அல்லது சுற்றுச்சூழல் குறித்து பொறுப்பற்ற நபர்கள் தீ வைத்து எரித் தால் குப்பை சாம்பல் ஆகிவிடும், பிரச் சனை தீர்ந்து விடும் என்று இதுபோன்ற &nbsp;விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர். இருக்கும் நெருக்கடியை மென்மேலும் சிக்கல்படுத்தி நிலத்தில் ஏற்படும் மாசு &nbsp;மட்டுமல்லாது, காற்றையும் மாசுபடுத்து கின்றனர். &nbsp;பல்வேறு நச்சுக் கழிவுகள் உட்பட &nbsp;கலந்திருக்கும் குப்பையை தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகை மண்டலம் சுவாசக் கோளாறு மட்டுமின்றி புற்று நோய் ஏற்படுத்தும் ஆபத்தும் உள் ளது. இது போதாது என்று, மாநக ராட்சி தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு, வெட்ட வெளியில் எவ்வித சுகாதார ஏற்பாடும் இல்லாமல் குப் பையை தரம் பிரிக்கும் பணியும் ஆபத் தான முறையில் நடைபெற்று வருகி றது. &nbsp;எனவே இப்பிரச்சனையை கண்கா ணித்து தடுக்க வேண்டிய பொறுப்பு மாநகராட்சிக்கு உள்ளது. அந்தந்த பகுதி பொதுமக்களும் இதுபோல் விஷ மத்தனம் செய்பவர்களை தடுத்து நிறுத்த வேண்டும். இருப்பினும், தேங்கி யிருக்கும் ஆயிரக்கணக்கான டன் குப் பையை அகற்றுவதற்கு அறிவியல் பூர்வமான திடக்கழிவு மேலாண்மை நடைமுறையை போர்க்கால அடிப்ப டையில் மாநில அரசின் ஒத்துழைப்பு டன், மாநகராட்சி நிர்வாகம் மேற் கொள்ள வேண்டும். மிக மோசமான சுகாதார சீர்கேடு அதிகரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். (ந.நி)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.