“அரசியலமைப்பு சாசனமே தீர்ப்புகளுக்கான ஒரே மாதிரி ; தெய்வீக தலையீடு அல்ல”
30 Dec 2025, 4:07 pm
<p><strong>“அரசியலமைப்பு சாசனமே தீர்ப்புகளுக்கான ஒரே மாதிரி ; தெய்வீக தலையீடு அல்ல”</strong></p>
<p>நீதிமன்ற தீர்ப்புகளில் அரசிய லமைப்பைத் தவிர வேறு எந்த ஆதாரத்தையும் கருத்தில் கொள்ளக் கூடாது. ‘தெய்வீக தலையீடு’ அல்லது பிற வெளிப்புற காரணிகள் தீர்ப்புகளை பாதிக்கின்றன என்பது அரசியலமைப்பி ற்கு முரணானது என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா கூறி யுள்ளார். இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி யில்,“நீதிபதிகள் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களுக்கு விசுவாசமாக இருப்ப தாக சத்தியம் செய்கிறார்கள். ஆனால் எந்தவொரு மத நம்பிக்கை அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திக ளுக்கும் அவர்கள் தங்கள் விசுவாசத்தை அறிவிக்க வேண்டும் என்று அர்த்த மல்ல. அரசியலமைப்புதான் நாட்டில் சட்ட அமைப்பின் ஒரே ஆதாரம். மற்ற நம்பிக்கைகளை அதனுடன் கலப்பது நீதித்துறையின் பாரபட்சமற்ற தன்மை யை பாதிக்கிறது. ஒரு மதச்சார்பற்ற நாடான இந்தியாவில், நீதிமன்றங்கள் அறிவியல் மற்றும் பகுத்தறிவு உண்மை கள் மற்றும் அரசியலமைப்பு மதிப்பு களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட நம்பிக்கை களை அலுவலகக் கடமைகளுடன் கலப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல” என அவர் கூறினார். சில நீதிமன்ற தீர்ப்புகள் ‘தெய்வீ கத்தால் ஈர்க்கப்பட்டவை’ என்று முன் னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் சமீபத்தில் கூறியதை அடுத்து நீதிபதி ஓகா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.</p>
