தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

13 Dec 2025, 5:13 pm
திருச்சி விரைவு செய்திகள்

பட்டீஸ்வரம்  தேனுபுரீஸ்வரர் கோவிலில்  2028 இல் குடமுழுக்கு விழா திருப்பணி

கும்பகோணம், டிச.13-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரத்தில் உள்ள ஞானாம்பிகையம்மன் உடனாய தேனுபுரீஸ்வரர் கோவிலில், அறநிலையத் துறை இணை ஆணையர் சிவக்குமார், தொல்லியல் துறை ஆலோசகர் சேகர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து அறநிலையத் துறை அலுவலர்கள் கூறுகையில், “பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் 2016-ல் ரூ.1.50 கோடி மதிப்பில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 12 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி மீண்டும் 2028-ல் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  கோவிலில் மூலவர் வடக்கு உள்பிரகாரத்தில் சுவர் எழுப்பி, பல ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கும் 63 நாயன்மார்கள் சந்நிதியைத் திறந்து, அங்கு 63 நாயன்மார்கள் சிலைகளை பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல அம்மன் சந்நிதிக்கு பின்புறம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள கதவுகளைத் திறக்கவும், கோவில் முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தெப்பக்குளத்தில் நீராழி மற்றும் தேர் முட்டி மண்டபங்களை புதிதாக கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, முதற்கட்டமாக அறநிலையங்கள் மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் அண்மையில் கோவிலில் உள்ள 5 கோபுரங்கள், மூலவர் சந்நிதி, தீர்த்தக் கிணறு, குளம் உட்பட அனைத்து இடங்களிலும் ஆய்வில் ஈடுபட்டனர். அந்த ஆய்வு அறிக்கை துறையின் உயர் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் கருத்துரு தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, திருப்பணி தொடங்கப்படும். திருப்பணி விரைவில் முடிக்கப்பட்டு 2028-ல் குடமுழுக்கு விழா நடத்தப்படும்’’ என்றனர்.

திருச்சி நீதிமன்றத்தில்  57,000 வழக்குகள் நிலுவை மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்

திருச்சிராப்பள்ளி, டிச.13-  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றது.  மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பிரபு வரவேற்றார். மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்து, சமரச தீர்வு அடிப்படையில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து வழக்கினை தீர்வு கண்டு, அதற்கான ஆணையை வழங்கினார்.  அப்போது அவர் பேசுகையில், “திருச்சி நீதிமன்றத்தில் 57,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்னும் புதிதாக வழக்குகள் தொடரப்படும். இந்த வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால், நீண்ட காலம் ஆகும். இந்த வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரச தீர்வு அடிப்படையில் தீர்வு கண்டால் மக்கள் பயனடையலாம். இந்த அரிய வாய்ப்பினை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார். தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.