தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்று இடம் வழங்காமல் கடைகளை அப்புறப்படுத்தக் கூடாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

14 Mar 2026, 2:57 pm
மாற்று இடம் வழங்காமல் கடைகளை அப்புறப்படுத்தக் கூடாது  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
<p><strong>மாற்று இடம் வழங்காமல் கடைகளை அப்புறப்படுத்தக் கூடாது &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</strong></p> <p>சென்னை, மார்ச் 14- திருவொற்றியூர் எண்ணூர் கத்தி வாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சிறு கடைகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. &nbsp;இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் உள்ளிட்டோர் மாற்று &nbsp;இடம் வழங்காமல் கடைகளை இடிக்கக் கூடாது எனக் கூறி வியாபாரிகளுடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆணையர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுமுக தீர்வு ஏற்படாததால் &nbsp;மண்டல அதிகாரியை சந்திக்குமாறு கூறினார். இதையடுத்து அந்த மண்டல அதிகாரியை சந்திக்க சென்ற போது அவர் அலுவலகத்தில் இல்லாத தால் அங்கிருந்த அலுவலர்களிடம் மனு அளித்தனர். மாற்று இடம் வழங்காமல் கடைகளை அப்புறப்படுத்த கூடாது என்றும், வியா பாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுந்தரராஜன் கூறினார். இதில் சிபிஎம் நிர்வாகிகள் &nbsp;பார்த்த சாரதி, புஷ்பா, தியாகராஜன் விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.