மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்
22 Dec 2025, 2:53 pm
<p><strong>மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்</strong></p>
<p>தூத்துக்குடி, டிச.22- தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திற னாளி பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம் பகவத் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலை மையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் திங்களன்று (டிச.22) நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனு தவி, முதியோர் உதவித்தொ கை, விதவை உதவித்தொ கை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகள் அடங்கிய 457 கோரிக்கை மனுக்கள் பெறப் பட்டது. பெறப்பட்ட கோ ரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளு மாறு துறைசார்ந்த அலுவ லர்களுக்கு மாவட்ட ஆட்சி யர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திற னாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.6359 மதிப்பில் 38 பயனா ளிகளுக்கு மோட்டார் பொ ருந்திய தையல் இயந்திரங்க ளையும், தலா ரூ. 14,490 மதிப்பில் 07 பயனாளிகளு க்கு திறன்பேசிகளையும் (Smart Phones), தலா ரூ.15,750 மதிப்பில் 10 பயனா ளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலிகள் என மொத்தம் 55 பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சத்து 572 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளி பயனா ளிகளுக்கு மாவட்ட ஆட்சி யர் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) உலகநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சி கள்) சாந்தி, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் பிரம நாயகம், துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
