தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

9 Mar 2026, 4:24 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

நிகிதா அளித்த நகை திருட்டுப் புகார் முடித்து வைப்பு!

மதுரை, மார்ச் 9 -  மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நிகிதா  என்பவர் அளித்த நகை திருட்டுப் புகாரின் பேரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக்  கொல்லப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், நகை திருட்டுப் புகார் அளித்த பேராசிரியை நிகிதா  மார்ச் 4 அன்று மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதி மன்றத்தில் நீதிபதி அசன் முகமது முன்பு ஆஜரானார். அப்போது, ‘நிகிதா அளித்த நகைத்திருட்டு புகார் தொடர்பான குற்றம் நிகழ்ந்ததற்கு ஆதாரங்கள் இல்லை;  எனவே, அவரின் புகாரை முடித்துவைக்க விரும்புவதாக வும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டது. நிகிதாவும் அதனை ஏற்றுக்கொண்டு, திங்களன்று எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை  முடித்து வைப்பதற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

ரூ.45,000 கோடி முதலீடு:  ஹூண்டாய் விரிவாக்கம்

சென்னை, மார்ச் 9- தயாரிப்பு மேம்பாடு, புதிய தொழில்நுட்பம் மற்றும் உற் பத்தி விரிவாக்கத்திற்காக ரூ.45,000 கோடி முதலீட்டை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ண றிவு, ரோபோடிக் கண்காணிப்பு போன்ற முறைகள் பயன் படுத்தப்பட்டு வாகன உற்பத்தி மேம்படுத்தப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் வாகனங்கள் 60-க்கும் மேற் பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த  முதலீட்டின் மூலம் சென்னை உலகளாவிய வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக மேலும் வலுப்பெ றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை விளையாட்டுத்  தலைநகரமாக உருவாக்க நடவடிக்கை

சென்னை, மார்ச் 9 - தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலை நகரமாக உருவாக்கும் நோக்கில் மாநில அரசு பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு தெரி வித்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முத லமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டு தலில் இளைஞர்களை ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடு படுத்தவும், விளையாட்டு திறமைகளை வளர்க்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல சர்வ தேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி கள் நடத்தப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 44  ஆவது செஸ் ஒலிம்பியாட், 2023 ஆசிய ஆடவர் ஹாக்கி  சாம்பியன்ஷிப், ஸ்குவாஷ் உலகக் கோப்பை, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட  பல முக்கிய போட்டிகள் மாநிலத்தில் நடத்தப்பட்டன. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு உதவித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டதுடன், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளும் வழங்கப் பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று சதவீத விளை யாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 301 விளையாட்டு வீரர்கள், அரசு  மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியமர்த்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செம்மஞ்சேரியில் ரூ.261 கோடியில் உலகத் தரத்திலான  விளையாட்டு நகரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு இந்திய அளவில் மட்டு மல்லாமல், உலகளவிலும் முக்கிய விளையாட்டு மைய மாக உருவெடுத்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

அரசு மருத்துமனை  டீன் தலைமையில் ஆகாஷ் டெலிசனுக்கு உடற்கூராய்வு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

மதுரை, மார்ச் 9 - மானாமதுரையில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த  பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பட்டதாரி இளை ஞர் ஆகாஷ் டெலிச னின் உடலை பிரேத பரிசோதனைச் செய்ய உயர் நீதிமன்ற மது ரைக் கிளை உத்தர விட்டுள்ளது. “ஆகாஷ் டெலிச னின் உடலை நீதித்துறை  நடுவர் முன்னிலையில், மதுரை ராஜாஜி மருத்து வமனை முதல்வர் தலை மையில் உடற்கூராய்வு  செய்ய வேண்டும். பிரே தப் பரிசோதனைக்கு முன்னதாக எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்க வேண் டும். பிரேதப் பரிசோத னையை வீடியோ பதி வுச் செய்ய வேண்டும். மானாமதுரை காவல் நிலைய சிசிடிவி காட்சி களை பாதுகாப்பது, உடற்கூராய்வு நடவ டிக்கையை வீடியோ வில் பதிவு செய்வது  உள்ளிட்ட கோரிக்கை களை அரசுத் தரப்பு  ஏற்றுக் கொண்டிருப்ப தால், தேசிய நெடுஞ்சா லையில் போக்கு வரத்துக்கு இடையூறாக நடத்தப்படும் போ ராட்டத்தை கைவிட வேண்டும்” என உத்தர விட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். ஆகாஷ் டெலிச னின் மரணத்திற்கு, ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஆகா ஷின் தந்தை தந்தை  ராஜேஷ் கண்ணன் தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படை யில் இந்த உத்தரவை நீதிபதி விஜயகுமார் பிறப்பித்துள்ளார்.

மார்ச் 12-இல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 4,219 மையங்களில் நடக்கிறது

சென்னை, மார்ச் 9 - தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 12 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த  தேர்வில் மாநிலம் முழுவதும் 12,467 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் உட்பட சுமார் 9  லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதில் 8,82,806 மாணவ-மாணவிகள் பள்ளிகளின் மூலம்  தேர்வு எழுதுகின்றனர். மேலும் சுமார் 26 ஆயிரம் தனித் தேர்வர்களும் தேர்வில் பங்கேற்க உள்ளனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 4,219 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் மையங்களில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் போன்ற ஒழுங்கின்மைகள் நடைபெறாமல் தடுக்க அரசு தேர்வுத்துறை பல்வேறு முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் 4,954 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட உள்ளன. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் அனைத்து தேர்வு மையங்களும் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியேறாமல் இருக்க  தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தேர்வு நடைபெறும் நாளில் காலை நேரத்திலேயே அந்தந்த மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்லப் படும் வகையில் கல்வித் துறை ஏற்பாடுகளை செய்துள்ளது. மாணவர்கள் அனைத்து பாடங்களுக்கும் போதுமான தயாரிப்புடன் தேர்வு எழுதுவதற்காக ஒவ்வொரு தேர்விற்கும் இடையே போதுமான இடைவெளியும் விடுமுறையும் வழங்கப் பட்டுள்ளதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.