தேர்தல் பரப்புரையை நாளை நெல்லையில் துவங்குகிறார் முதல்வர்!
1 Apr 2026, 4:02 pm
<p><strong>தேர்தல் பரப்புரையை நாளை நெல்லையில் துவங்குகிறார் முதல்வர்!</strong></p>
<p>33 தொகுதிகளுக்குச் செல்கிறார் சென்னை, ஏப். 1 - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமது தேர்தல் பரப்பு ரையை மார்ச் 31 அன்று திருவாரூரில் தொடங்கினார். இந்த பரப்புரையின் இரண்டாம் கட்டப் பயணத் திட்டம் வெளியாகி யுள்ளது. இதன்படி, ஏப்ரல் 3 அன்று திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பொதுக்கூட்டத்தில் பிரச்சாரத்தைத் துவங்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதா புரம் ஆகிய தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர் களுக்கு ஆதரவு திரட்டுகிறார். ஏப். 4 - பத்மநாபபுரம் ஏப்ரல் 4 அன்று நாகர்கோவில் மற்றும் சங்கரன்கோவில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் முதலமைச்சர், கன்னி யாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விள வங்கோடு, கிள்ளியூர், சங்கரன்கோவில், ஆலங்குளம், தென் காசி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர் ஆகிய தொகுதி களில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். ஏப். 5 - மதுரை ஏப்ரல் 5 அன்று விருதுநகர் மற்றும் மதுரை - திருமங்க லம் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று சாத்தூர், ராஜபாளை யம், சிவகாசி, திருவில்லிபுத்தூர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர், மேலூர், மதுரை கிழக்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேற்கு, சோழவந்தான், திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் களுக்கு வாக்குகள் சேகரிக்கிறார். இம்மூன்று நாட்களில் மொத்தம் 33 தொகுதி வேட்பாளர்களுக்கு ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்கிறார்.</p>
