தீக்கதிர் முக்கிய செய்திகள்
7 Jan 2026, 4:05 pm

பொங்கல் பரிசு தொகுப்பு இன்று ஆலந்தூரில் முதல்வர் துவக்கி வைக்கிறார்!

சென்னை: தமிழ்நாட்டு மக்களின் பாரம்பரியத் திரு விழாவான பொங்கல் விழா ஜனவரி 15 அன்று கொண்டா டப்பட உள்ளது. இதையொட்டி, 2 கோடியே 22 லட்சத்து 21 ஆயிரத்து 170 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப் பரிசாக ரூ. 3,000 வழங்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் முடிவடைந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியையும் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜன. 8) அன்று காலை 9.45 மணிக்க ஆலந்தூரில் தொடங்கி வைக்கிறார். அதேநேரத்தில் அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங் களில் பொங்கல் பொருட்களையும் ரொக்கப்பணம் ரூபாய் 3,000 ஐயும் வழங்கி தொடங்கி வைக்கிறார்கள். மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலம் விலையில்லா வேட்டி சேலைகளும் பொங்கல் தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங் கப்படுகின்றன.

நீதிபதி சுவாமிநாதனை விமர்சிக்கும் புத்தகத்தை பறிமுதல் செய்ய உத்தரவு

சென்னை: திருப்பரங்குன்றம் மலைக் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டி எழுதப்பட்ட புத்தகம் வியாழக்கிழமை (ஜனவரி 8) அன்று தொடங்கும் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. எனவே, இந்த புத்தகத்தை தடைசெய்ய வேண்டும் எனக் கூறி வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.ஆர். சுந்தரேசன், தமிழக அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆகியோர் ஆஜராகினர். தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா கூறுகையில், மிகவும் அவதூறான களங்கம் ஏற்படும் வார்த்தைகள் பயன்ப டுத்த ப்பட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என்றும், அறிவுசார் தளமான சென்னை புத்தகக் கண்காட்சியில் இது மாதிரியான புத்த கங்களை அனுமதிக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பி னார். முடிவில், சர்ச்சைக்குரிய அந்த புத்தகத்தின் பதிப்பாளர் கீழைக்காற்று பதிப்பகம் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர உத்தரவிட்டது. இது தொடர்பாக கீழைக்காற்று பதிப்பாளர் மூன்று வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த புத்தகத்தை பறிமுதல் செய்யவும், புத்த கம் விற்பனைக்கு வரவில்லை என்பதையும் விற்பனை செய்யப்படவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை, ஜன. 7 - இந்தியப் பெருங் கடல் பகுதிகளில் உரு வான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற் றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை அறிவித் துள்ளது. பூமத்திய ரேகையை யொட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நில விய வளிமண்டல மேல டுக்கு சுழற்சி காரணமாக திங்களன்று மாலை தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது செவ்வாய்க் கிழமை அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப் பெற்ற நிலையில், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் காற்ற ழுத்த தாழ்வு மண்டல மாக தற்போது வலுப் பெற்றுள்ளது. தற்போது சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 1270 கிலோமீட்டர் தொ லைவில் மையம் கொண் டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத் தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசை யில் நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் சின்னம் காரணமாக, வெள்ளிக் கிழமை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சா வூர், திருவாரூர், புதுக் கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இராமநாதபுரம், சிவ கங்கை, திருச்சி, அரிய லூர், கடலூர், விழுப்பு ரம், செங்கல்பட்டு மாவட் டங்களில் ஓரிரு இடங் களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. வங்கக்கட லில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான தால், 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்ச ரிக்கைக் கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.