ஜன. 12 வரை வைகோ ‘சமத்துவ நடைப்பயணம்!’ - வைகோ பேட்டி
1 Jan 2026, 4:14 pm

முதலமைச்சர் இன்று துவக்கி வைக்கிறார்

திருச்சிராப்பள்ளி, ஜன. 1- ம.தி.மு.க. பொதுச்செய லாளர் வைகோ, திருச்சியில் இருந்து மதுரை வரை ஜனவரி 2 முதல் 12 வரை சமத்துவ நடைப்பயணம் செல்கிறார். அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான இதற்கான நிகழ்ச்சியில், மதிமுக முதன் மைச் செயலாளர் துரை.வைகோ எம்.பி. வரவேற்றுப் பேசுகிறார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்துப் பேசுகிறார். நடைப்பயணத்தை தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச் சருமான மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகில் தொடங்கி வைத்து பேசுகிறார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர். இந்த நடைப்பயணம் மதுரையில் ஜன வரி 12 அன்று நிறைவடைகிறது.

ஆர்எஸ்எஸ்-பாஜகவின் கலவர முயற்சியை முறியடிப்போம்! - வைகோ பேட்டி

சமத்துவ நடைப்பயணத்தையொட்டி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் வியாழக்கிழமையன்று செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2022 பிப்ரவரியில் அலகாபாத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் மாநாட்டில் 32 பக்கத்திற்கு பிரகடனம் வெளியிட்டார்கள். அந்த வாசகங்களை படிக்கும்போது தலை யில் இடி விழுவது போன்று இருந்தது. குறிப்பாக, இனி இந்தியா என்ற பெய ருக்கு பதிலாக ‘பாரத்’ என்றுதான் அழைக்க வேண்டும். இந்தியாவின் தலைநகரம் தில்லியாக இருப்பதை மாற்றி, வாரணாசி தலைநகரமாக இருக்க வேண்டும். கிறிஸ் தவர்கள், இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை இருக்கக் கூடாது. இந்தி, சமஸ்கிருதம்தான் இந்த நாட்டினுடைய ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். வேறு எந்த மொழிக்கும் இடம் அளிக்கக் கூடாது என குறிப்பிடப் பட்டிருந்தது. இதுபோன்று அபாயகரமான அறிவிப்புகளை ஒன்றிய அரசு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

ஆனால், இதற்கு எந்தவித எதிர்ப்பையும் ஆளும் பாஜக அரசோ, நரேந்திர மோடியோ தெரி விக்கவில்லை. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் 100 ஆண்டுகளாக மோதல் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது சாதிய - மதவாத மோதல்களை தமிழ கத்திலும் உருவாக்கப் பார்க்கிறார்கள். அதைத் தடுப்பதற்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சகோ தரர்களாக ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முழுமையாக வலியுறுத்தி திருச்சியில் இருந்து நடைப்பய ணத்தை தொடங்க உள்ளேன். தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இந்நிகழ்வை எடுத்துக் கொள்ளலாம். தினமும் 600 பேர் என்னுடன் நடைப் பயணத்தில் கலந்து கொள்வார்கள். ஒரு நாளைக்கு 15 முதல் 17 கிலோ மீட்டர் வரை நடைப்பயணம் மேற் கொள்ள உள்ளோம். இவ்வாறு வைகோ தெரிவித்தார். பேட்டியின் போது முதன்மை செய லாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் டாக்டர் ரொ கையா, தி.மு. ராஜேந்திரன், மாநிலப் பொருளாளர் செந்திலதிபன், செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி, அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ குருநாதன், மாவட்டச் செய லாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், டி.டி.சி. சேரன், பெரம்பலூர் மாவட்டச் செய லாளர் ஜெயசீலன் மற்றும் நிர்வாகி கள் உடனிருந்தனர்.