முந்தய பக்கம்

மொழிப்போர் தியாகிகள் சிலைகளை முதல்வர் திறந்து வைத்தார்

25 Jan 2026, 4:16 pm
மொழிப்போர் தியாகிகள் சிலைகளை முதல்வர் திறந்து வைத்தார்
<p><strong>மொழிப்போர் தியாகிகள் சிலைகளை முதல்வர் திறந்து வைத்தார்</strong></p> <p>சென்னை, ஜன. 25 - &nbsp;சென்னை எழும்பூரில் உள்ள தாள முத்து-நடராசன் மாளிகையில் மொழிப்போர் &nbsp;தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகி யோருக்கு அமைக்கப்பட்ட சிலைகளை முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 1938 ஆம் ஆண்டு மொழிப்போர்க் களத் தின் முதற்கட்டத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி உயிர்த்தியாகம் செய்த &nbsp;நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோருக்கு &nbsp;மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள அவர் களது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினார் முதலமைச்சர். மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் நினைவஞ்சலி செலுத்திய முதலமைச்சர், தாளமுத்து நடராசன் மாளிகையில் அமைக் கப்பட்ட உருவச் சிலைகளையும் திறந்து வைத்தார். &nbsp;முன்னதாக, சென்னை மூலக்கொத் தளத்தில் உள்ள தாளமுத்து, நடராஜன் நினை விடத்திற்கு ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் &nbsp;பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மொழிப்போர்களில் உயிர்ப்பலியான மற்ற தியாகிகளையும் இந்நாளில் தமிழு ணர்ச்சியோடு நினைவுகூர்வதாக எக்ஸ் தளப் &nbsp;பதிவில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram