முந்தய பக்கம்

முதல்வர் தீர்வு காண வேண்டும்

16 Feb 2026, 2:37 pm
முதல்வர் தீர்வு காண வேண்டும்
<p><strong>முதல்வர் தீர்வு காண வேண்டும்</strong></p> <p>இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தல் சென்னை, பிப்.16 &ndash; டாஸ்மாக் ஊழியர் பிரச்சனையில் முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண &nbsp;வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிப ரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டாக முத லமைச்சருக்கு விடுத்துள்ள வேண்டு கோள் வருமாறு: தமிழ்நாடு மாநில வாணிப கழ கத்தின் கீழ் (டாஸ்மாக்) சில்லறை மது பானங்கள் விற்பனைப் பிரிவில், 2003 ஆம் ஆண்டு தொகுப்பூதிய அடிப் படையில் 25 ஆயிரம் பேர் தாற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களாக பணி &nbsp;நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், &nbsp;ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி போராடி வருகின்ற னர். பணிப் பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றி வரும் இவர்களது கோரிக் கைகள் மீது முதலமைச்சர் நேரடி யாக தலையிட்டு, தொழிற்சங்க பிரதி நிதிகளை அழைத்துப் பேசி தீர்வு &nbsp;காண வேண்டும் என்று அந்த வேண்டு கோள் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram