தீக்கதிர் முக்கிய செய்திகள
16 Feb 2026, 2:37 pm

எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைஞர் விருது முதல்வர் வழங்கினார்

சென்னை: கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது 2024-க்கு நடிகை எம்.என். ராஜம் மற்றும் 2025-க்கு இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆகி யோருக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை வழங்கி கவுரவித்தார். 200-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் 1950-கள் மற்றும் 1960- களில் முன்னணி நாயகியாக விளங்கி னார். ரத்தக்கண்ணீர், பாசமலர், நாடோடி மன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். 70-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களை இயக்கிய எஸ்.பி. முத்துராமன் தமிழ் சினிமாவின் வெற்றிகர மான இயக்குநர்களில் ஒருவர். இருவருக்கும் விருதுடன் தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரி சும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

சென்னை: தெற்கு வங்கக் கடல் பகுதி யில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி யுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மை யம் தெரிவித்துள்ளது. கிழக்கு பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங் கடல் மற்றும் தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திங்க ளன்று காலை காற்ற ழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது மேலும் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து தென் மேற்கு வங்கக் கடலை நோக்கி நகரும். இதன் காரணமாக பிப்ரவரி 18 முதல் 21 வரை தமிழ கத்தில் ஓரிரு மாவட்டங் களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கனமழை, மிக கனமழைக்கு வாய்ப்பில்லை. 2002ஆம் ஆண்டுக் குப் பிறகு பிப்ரவரி மாதத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உரு வாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.

மார்ச் 2 முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்

சென்னை: பன்னி ரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், மார்ச் 2 அன்று துவங்கி மார்ச் 26 வரை நடைபெற உள்ள தாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரி வித்துள்ளார். அதேபோல, மார்ச் 11 முதல் ஏப்ரல் 4 வரை 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 27,783 தனித்தேர்வர்கள் உட்பட 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாண வர்களும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 26,196 தனித்தேர்வர்கள் உட்பட 9 லட்சத்து 9 ஆயி ரத்து 2 மாணவர்களும் எழுதுகின்றனர்.