தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களைக் காக்கும் உண்மையான காவலன் முதலமைச்சர்! திருவிடைமருதூரில் திருச்சி சிவா பேச்சு

3 Apr 2026, 6:05 pm
மக்களைக் காக்கும் உண்மையான காவலன் முதலமைச்சர்! திருவிடைமருதூரில் திருச்சி சிவா பேச்சு
<p><strong>மக்களைக் காக்கும் உண்மையான காவலன் முதலமைச்சர்! திருவிடைமருதூரில் திருச்சி சிவா பேச்சு</strong></p> <p>கும்பகோணம், ஏப். 3: &ldquo;காவலன் விழித்திருந்தால் கள்வனுக்கு வேலையில்லை; அதுபோல தமிழக மக்களைக் காக்கும் உண்மையான காவலனாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்&rdquo; எனத் திருவிடைமருதூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா உரையாற்றினார். தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் (தனி) தொகுதி யில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் அமைச்சர் கோவி. செழியனை அறிமுகப்படுத்தும் இக்கூட்டம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அரசியல் அறமும் சமூக நீதியும் திருவிடைமருதூர் தொகுதியில் நான்காவது முறையாகக் கோவி. செழியனை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய திருச்சி சிவா, திமுக அரசின் திட்டங்கள் கட்சி எல்லைகளைக் கடந்தவை என்பதைச் சுட்டிக்காட்டினார். மகளிர் உரிமைத் தொகை என்பது திமுகவினருக்கு மட்டுமின்றி அதிமுகவினர் உள்ளிட்ட தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படுவதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். &lsquo;எல்லோருக்கும் எல்லாம்&rsquo; என்பதே திமுக ஆட்சியின் தாரக மந்திரம். மகளிர் விடியல் பயணத் திட்டத்தை இலவசம் என்று சொல்வதை விட, ஒரு சகோதரனாகப் பயணக் கட்டணத்தை அரசே ஏற்பதாகக் கருதுவதே முறை. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்வு, காலை உணவுத் திட்டம் ஆகியவை மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுத்தப்பட்டவை. பாஜக - அதிமுக கூட்டணியின் முரண்பாடுகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களையும், இலங்கைத் தமிழர்களையும் சேர்க்கக் கோரி மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைய அதிமுக அளித்த 13 வாக்குகளே காரணம். தமிழகத்தின் உரிமைகள் வஞ்சிக்கப்படுவதற்கு அதிமுகவே துணை போகிறது. ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே நாட்டில் இருக்க வேண்டும் என பாஜக நினைப்பதாகவும், ஆனால் அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து வாழ வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார். எழுச்சிமிகு பங்கேற்பு இக்கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் சாக்கோட்டை அன்பழகன், சி.பி.எம். மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் மு.அ. பாரதி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் குமரன், தேமுதிக மாவட்டச் செயலாளர் பா. சுகுமார், விசிக ஏ.சி. பன்னீர்செல்வம், மதிமுக அன்பு உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். பந்தநல்லூர், நெய்குப்பை, திருமங்கைச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாற்றுக்கட்சியினர் விலகி திமுகவில் இணைந்தனர். கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன் மற்றும் திமுக ஒன்றியச் செயலாளர்கள் கோ.க. அண்ணாதுரை, சுந்தர ஜெயபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.