ஜி.டி.நாயுடு உருவச்சிலையை முதல்வர் திறந்து வைத்தார்!
10 Mar 2026, 3:51 pm
<p><strong>தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார்</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 10- ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாராபுரம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக செவ்வாயன்று திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகம் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் அறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறை, பொறி யாளர்கள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவு அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நி கழ்ச்சியின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உடன் இருந்தார். தாராபுரத்தில் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்தி கேயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.சங்கமித்திரை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொது மக்கள் என பலர் பங்கேற்றனர்.</p>
