தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.12 கோடியில் காங்கேயம் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்ட கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார்

6 Feb 2026, 5:17 pm
ரூ.12 கோடியில் காங்கேயம் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்ட கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார்
<p><strong>ரூ.12 கோடியில் காங்கேயம் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்ட கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார்</strong></p> <p>திருப்பூர், பிப்.6&ndash; தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் காணொலி காட்சி வாயிலாக, காங்கேயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கூடுதல் படுக் கைகளுடன் கூடிய கூடுதல் கட்டி டத்தை திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம், காங்கே யத்தில் உள்ள அரசு மருத்துவ மனை மாவட்டத் தலைமை மருத்து வமனையாக தரம் உயர்த்தப்பட் டுள்ளது. இங்கு ரூ.12 கோடி மதிப் பீட்டில் கூடுதல் படுக்கைகளுடன், கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள் ளது. வெள்ளியன்று தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் இந்த கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதேசமயம் காங்கேயம் அரசு மருத்துவம னையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மனித வள மேலாண் மைத்துறை அமைச்சர் என்.கயல் விழி செல்வராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர். இந்த திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சி யர் மனிஷ் நாரணவரே தலைமை ஏற்றார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் முன் னிலை வகித்தார். &nbsp;சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில், 31,183 சதுர அடி &nbsp;பரப்பளவில் மூன்று தளங்களுடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. &nbsp;இக்கட்டடத்தில் 58 படுக்கை வசதி கள் மற்றும் 4 அறுவை சிகிச்சை &nbsp;அரங்குகள் அமைக்கப்பட்டுள் ளன. இதில் தரைதளம் 8,482 ச.அடி பரப்பளவில் வரவேற்பறை, கண் சிகிச்சை, எலும்பு சிகிச்சை, காது, &nbsp;மூக்கு, தொண்டை வெளிப்புற &nbsp;நோயாளிகள் பிரிவு, மருந்தக அறை மற்றும் சாய்தள வசதிகளுடனும் முதல் தளம் 8,482 ச.அடி பரப்பள வில் பெண்களுக்கான அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு, மருத்துவர் மற்றும் செவிலியர் அறை, அறுவை அரங்கு (மகப் பேறு), அறுவை அரங்கு (பொது மருத்துவம்).. பெண்களுக்கான அறுவை சிகிச்சைக்கு முன் கவ னிப்பு பிரிவு, கழிவறை மற்றும் சாய் தள வசதிகளுடனும் அமைக்கப்பட் டுள்ளன. இரண்டாம் தளம் 8,482 ச.அடி பரப்பளவில் கண் அறுவை சிகிச்சை பிரிவு, மருத்துவர் மற்றும் செவிலி யர் அறை, அறுவை அரங்கு (மகப் பேறு), அறுவை அரங்கு (செப்டிக்) &nbsp;அறுவை அரங்கு, (கண் சிகிச்சை) மகப்பேறு பிரிவு, கழிவறை மற்றும் சாய்தள வசதிகளுடனும், &nbsp;மூன்றாம் &nbsp;தளம் 5,737 ச.அடி பரப்பளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக் கான சிகிச்சை பிரிவு, மருத்துவர் மற்றும் செவிலியர் அறை, கழி வறை மற்றும் சாய்தள வசதிகளு டன் கட்டப்பட்டுள்ளது. காங்கேயம் நகரம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கியமான போக் குவரத்து சந்திப்பு மையமாக உள் ளது. இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நேரிட்டு உயிரிழப்பு கள் அதிகம் நடைபெறும் பகுதியா கவும் உள்ளது. ஏதேனும் பெரும் விபத்து என்றால் ஈரோடு அல்லது கோவைக்கு அவசர ஊர்தியில் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இங்கு கூடுதல் மருத்துவ வசதிகளுடன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி இருப்பது வரவேற் கத்தக்கது. அதேசமயம் விபத்து &nbsp;தலைக்காய சிகிச்சைப் பிரிவையும் இங்கு ஏற்படுத்தி, அதற்குரிய மருத் துவர்கள், செவிலியர்கள், மருத் துவப் பணியாளர்களையும் 24 &nbsp;மணி நேரமும் பணியில் இருக்கும் படி ஏற்பாடு செய்ய வேண்டும் என காங்கேயம் வட்டார மக்கள் தெரிவித்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.