கடலூரில் மாதிரி பள்ளியை காணொலி வாயிலாக திறந்துவைத்தார் முதல்வர்
22 Dec 2025, 4:47 am
<p>கடலூர், டிச.22- கடலூர் மஞ்சக்குப்பத்தில் ரூ.56.47 கோடி மதிப்பீட்டில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் விடுதியுடன் கூடிய அரசு மாதிரி பள்ளி கட்டப்பட்டுள்ளது. இந்த பள்ளி கட்டிடத்தை திங்கட்கிழமை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலை மைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கடலூரில் நடந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி வைத்து, மாதிரி பள்ளிக்கூடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். இந்த மாதிரி பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 9-ம் வகுப்பில் 51 மாணவர்களும், 10-ம் வகுப்பில் 140 மாணவர்களும், 11-ம் வகுப்பில் 123 மாணவர்களும், 12-ம் வகுப்பில் 150 மாண வர்களும் என மொத்தம் 464 மாணவர்கள் படிக்க உள்ளனர். நிகழ்ச்சியில் துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவசங்கரநாயகி, மாவட்ட கல்வி அலுவலர்கள் இஸ்மாயில், மோகன், தி.மு.க. மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, பஷீர் அகமது மற்றும் கவுன்சிலர்கள், அரசு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
