குமரி ஆட்சியருக்கு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு விருது முதலமைச்சர் வழங்கி,கௌரவித்தார்
26 Feb 2026, 3:28 pm
<p><strong>குமரி ஆட்சியருக்கு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு விருது முதலமைச்சர் வழங்கி,கௌரவித்தார்</strong></p>
<p>நாகர்கோவில்,பிப்.26- தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தைகள் பாலின விகிதத்தினை உயர்த்தியதில் சிறப்பாக செயல் பட்டு இரண்டாம் இடம் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா வுக்கு பிப்ரவரி 26 அன்று சென்னையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌர வித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா கூறியதாவது: பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் 2024-ஆம் வருடம் பாலின விகிதம் குறைவாக காணப்பட்ட தோவாளை, நாகர்கோவில், இராஜாக்க மங்கலம், தக்கலை, மேல்புறம் ஆகிய 5 வட்டா ரங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிக ரிக்கும் வகையில், மக்களிடையே பெண் குழந்தைகளுக்கு எதிரான மனப்பாங்கினை களையும் பொருட்டு பல்வேறு விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் அதிகமாக நடத்தப்பட்டன. அதன்விளைவாக அந்த பகுதியில் குழந்தை களின் பாலின விகிதம் அதிகரித்துள்ளது. இத்தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிற்சிகள், கருத்தரங்கங்கள், ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றின் காரண மாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான குழந்தை பாலின விகிதமானது 965-லிருந்து 990.6ஆக அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளான பிப்ரவரி 24 அன்று பெண் குழந்தைகளின் பாலின விகி தத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செய லாற்றி மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று, தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பெருமை சேர்ந்தமைக்காக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றியினை தெரி வித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் நா.முருகா னந்தம், சமூக நலன்- மகளிர் உரிமைத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். </p>
