முந்தய பக்கம்

சீர்காழியில் வீதி வீதியாக வாக்குச் சேகரித்த முதல்வர்

7 Apr 2026, 5:38 pm
சீர்காழியில் வீதி வீதியாக வாக்குச் சேகரித்த முதல்வர்
<p><strong>சீர்காழியில் வீதி வீதியாக வாக்குச் சேகரித்த முதல்வர்</strong></p> <p>சென்னை, ஏப்.7 - தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.23 அன்று நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். &nbsp;இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 31 அன்று திருவாரூரில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியதிலிருந்து திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், சங்கரன்கோவில், விருதுநகர், திருமங்கலம் உட்பட பல மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். &nbsp;முதல் இரண்டு கட்ட பரப்புரைகளை முடித்துவிட்டு, புதுச்சேரியில் மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கிய அவர், ஏப்ரல் 7 (செவ்வாய்க்கிழமை) சீர்காழி மற்றும் கடலூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டார். சீர்காழி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனுக்கு ஆதரவாக நடைபயிற்சியாக சென்று வாக்குச் சேகரித்தார். &nbsp;திமுக அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் கேட்டறிந்ததோடு, தேர்தல் வாக்குறுதிகளையும் விளக்கினார். தேநீர் கடையில் மக்களோடு அமர்ந்து தேநீர் அருந்திய முதலமைச்சர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்து சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram