தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாழ்வை செழிக்க வைத்த கொண்டைக்கடலை பயிர்! வெளிநாட்டு இறக்குமதியால் வாடிப் போன விவசாயிகள்

5 Feb 2026, 3:40 pm
வாழ்வை செழிக்க வைத்த கொண்டைக்கடலை பயிர்! வெளிநாட்டு இறக்குமதியால் வாடிப் போன விவசாயிகள்
<p><strong>வாழ்வை செழிக்க வைத்த கொண்டைக்கடலை பயிர்! வெளிநாட்டு இறக்குமதியால் வாடிப் போன விவசாயிகள்</strong></p> <p>உடுமலை வட்டாரத்தில் சில பத்தாண்டுகளுக்கு முன்பு, சில நூறு ஏக்கரில் மானாவாரிப்பயிர் சாகுபடி செய்து, அதில் கிடைத்த வருமானத்தில் கல்லூரி கட்டிய தையும், கிராமங்களில் இருந்து &nbsp;நகரத்திற்கு சென்று பெருந்தொ ழில் தொடங்கியதையும் சொல் லும் விவசாயிகள், இன்று அதே &nbsp;மானாவாரிப் பயிரை சாகுபடி செய் தால் வருமானம் கிடைக்காது, வாழ முடியாது என்று அதைக் கை விட்ட தையும் வேதனையுடன் சொல் கின்றனர். உள்ளூரில் விளையும் இந்த &nbsp;மானாவாரிப் பயிரை, வெளிநாடு களில் இருந்து குறைவான விலை யில் இறக்குமதி செய்வதால் தான் &nbsp;விவசாயிகளுக்கு இந்த நிலை ஏற் பட்டது என்று விவசாயிகள் சொல் கின்றனர். அமெரிக்காவுடன் வர்த் தக ஒப்பந்தம் ஏற்படுத்தினால், இங் குள்ள விவசாயிகளுக்கு, அவர்கள் சாகுபடி செய்யும் விவசாயப் பயிர் களுக்கு என்ன நிலை ஏற்படும் என் பதை, இந்த அனுபவத்தை தெரிந்து கொண்டால் புரிந்து கொள்ள முடியும் என்று விவசா யிகள் கூறினர். மேலும், அவர்கள் சொல்லும் அந்த மானாவாரி பயிர் கொண்டைக் கடலை! இதை பனிக்கடலை என் றும் விவசாயிகள் &nbsp;சொல்கின்றனர். காலங்காலமாக விவசாயிகள் கொண்டைக் கடலையும், கொத்து &nbsp;மல்லியையும் சாகுபடி செய்து வந் துள்ளனர். குறிப்பாக உடுமலை, பொள்ளாச்சியின் ஒரு பகுதி, கிணத் துக்கடவு, சுல்தான்பேட்டை, பல்ல டம் ஆகிய வட்டாரங்களில் பல்லா யிரக்கணக்கான ஏக்கரில் இந்தப் பயிர் சாகுபடி நடைபெற்று வந்துள் ளது. இப்போது விரல் விட்டு எண் ணக்கூடிய சில விவசாயிகள் மட் டும் இதை சாகுபடி செய்கின்றனர். கொங்கல் நகரம் வட்டாரத்தில் மட்டும் ஆயிரம் ஏக்கர் சாகுபடி நடைபெற்றது, இன்று 50 ஏக்கர் கூட சாகுபடி நடைபெறவில்லை என்று இப்பயிரை விவசாயம் செய்து வரும் கொங்கல் நகரம் பகுதியை சேர்ந்த தங்கவடி வேலன் கூறினார். ஐப்பசி மாதத் தில் வடகிழக்கு பருவமழையை &nbsp;நம்பித்தான் இந்த பயிர் செய்ய முடியும். விதைத்துப் பராமரித்து அறுவடை செய்ய 110 நாட்கள் ஆகும். கரிசல் மண்ணில் விளை யும் இப்பயிர் பனிக்காலத்தின் ஈரப்பதம் காரணமாக நன்றாக விளையும். இங்கு விளையும் பயிர் களுக்கு மாவுச் சத்து அதிகம். ஆனால் கடந்த சில வருடங்களாக ஈரப்பதம் இல்லாத வறட்டு &nbsp;பனி யாக வீசுவதால் இந்த கடலை சுருங்கி விட்டது, மேலும் பூக்கும் பருவத்தில் மஞ்சள் வைரஸ் தாக்கு தலும் கடலைப்பயிர் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கிறது என்று அவர் கூறினார். இதைவிட முக்கி யம் கொண்டைக்கடலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டதுதான் விவ சாயிகள் இப்பயிர் சாகுபடியை கைவிட்டதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு குவிண்டால் (100 கிலோ) ரூ.11 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. ஆனால், ஒன் றிய அரசு கனடா மற்றும் டான் சானியா நாடுகளில் இருந்து கொண் டைக்கடலை இறக்குமதி செய்ய அனுமதித்தது. அங்கிருந்து வரும் கொண்டைக்கடலை விலை குறை வாக இருந்ததால் சந்தையில் இங்கு உற்பத்தியான கடலைக்கு விலை கிடைக்கவில்லை. இந்த 15 ஆண்டுகளில் தற்போது கொண் டைக்கடலை குவிண்டால் ரூ.6 ஆயி ரத்துக்குத்தான் விற்பனை ஆகி றது. அதுவும் விலை உத்தரவாத மில்லாத நிலை உள்ளது. &nbsp;கொண்டைக்கடலை சாகுபடி செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு விதைக்க, உரம் இட்டுப் பராம ரிக்க, அறுவடை செய்ய அதிகபட் சம் ரூ.30 ஆயிரம் செலவாகும். நல்ல விளைச்சல் என்றால், ஒரு &nbsp;ஏக்கருக்கு அதிகபட்சம் 10 குவிண் டால் கூடக் கிடைக்கும். அதேசம யம் விளைச்சல் பாதிக்கப்பட்டால் 4, 5 குவிண்டால் கூடக் கிடைப்பது அரிது. எனினும் சராசரியாக 7 குவிண்டால் கடலை கிடைக்கும். தற்போதைய விலையில் ஏழு &nbsp;குவிண்டாலுக்கு ரூ.42 ஆயிரம் கிடைக்கும். இது 110 நாள் பயிர் என்றாலும் கொண்டைக்கடலை பயிர் செய்த நிலத்தில், ஆண்டு முழு வதும் வேறு பயிர் செய்ய முடியாது. ரூ.30 ஆயிரம் செலவு செய்து ரூ.42 &nbsp;ஆயிரம் மட்டுமே கிடைக்கும், நிலத் தில் வேறு பயிர் சாகுபடியும் செய்ய &nbsp;முடியாவிட்டால் ஓர் ஆண்டுக்கு இந்த வருமானத்தில் வாழ முடி யுமா? என்று அந்த விவசாயி கேட் கிறார். மேலும், வெளிநாடுகளிலி ருந்து கப்பலில் தூத்துக்குடி துறை முகத்துக்கு வரும் கொண்டைக் கடலைகளை டன் கணக்கில் வாங்கி &nbsp;வியாபாரிகள் இருப்பு வைத்து &nbsp;அதன் விலையை தீர்மானிப்ப தால், உள்ளூர் விவசாயிகள் பாதிக் கப்படுகின்றனர். ஒருபுறம் உற்பத்தி &nbsp;செலவு அதிகரிக்கிறது; மறுபுறம் கொண்டைக்கடலைக்கு கட்டுப்படி யான விலை கிடைக்கவில்லை. இத னால் தான் தற்போது இப் பயிர் சாகுபடிப் பரப்பளவு பெரும ளவு வீழ்ந்து விட்டது. தற்போது பயி ரிட்டிருப்பவர்களும் இனி அடுத்த பருவத்துக்கு இப்பயிரைச் சாகு படி செய்ய மாட்டோம் என்று வேத னையுடன் கூறினர். -வே.தூயவன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.