தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேலம்பாளையத்தில் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ள இடுகாடு

27 Dec 2025, 6:08 pm
வேலம்பாளையத்தில் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ள இடுகாடு
<p><strong>வேலம்பாளையத்தில் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ள இடுகாடு</strong></p> <p>திருப்பூர், டிச.27- திருப்பூர் மாநகராட்சியின் 12 ஆவது &nbsp;வார்டில் அமைந்துள்ள வேலம்பாளை யம் அரசு மருத்துவமனைப் பின்புறத் தில் உள்ள இடுகாடு பராமரிப்பின்றி விடப்பட்டு, குப்பை மேடாக மாறி யுள்ளது. இதன் காரணமாக சமூக &nbsp;விரோதிகளின் புகலிடமாக உருமாறி யுள்ளது. உடனடியாக இதன் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால் கூறு கையில், திருப்பூர் மாநகராட்சி, 12 &nbsp;ஆவது வார்டுக்கு உட்பட்ட 15.வேலம் பாளையம் அரசு மருத்துவமனைக்குப் பின்புறமுள்ள இடுகாடு முறையாக &nbsp;பராமரிக்கப்படாத காரணத்தால் புதர் &nbsp;மண்டியுள்ளது. மாநகராட்சி குப் பைகள் இங்கு கொட்டப்படுவதால், குப்பைக் கிடங்காகவும், கழிப்பிடமா கவும் மாற்றப்பட்டுள்ளது. கடும் துர்நாற் றம் வீசுவதால் அருகிலுள்ள மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள் ளாகின்றனர். மேலும், கஞ்சா, மது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தும் சமூக விரோதிகள் இங்கு &nbsp;திரிந்து கொண்டிருக்கின்றனர். இது &nbsp;பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக் கியுள்ளது. இந்த இடுகாட்டில் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை செய்ய வரும் உறவினர்கள் கடும் அவதிக்குள்ளா கிறார்கள். காத்திருப்போர் அறையும், தகனம் செய்யும் இடமும் மிகவும் சிதில மடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. மயானத்திற்குள் செல்லும் &nbsp;வழித்தடமும் முறையாக பராமரிக்கப்ப டவில்லை. எனவே, இந்த இடுகாட்டைச் &nbsp;சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். &nbsp;மரக்கன்றுகள் நடுதல், புல்வெளியுடன் கூடிய நடைபாதை, மின் விளக்குகள் மற்றும் குடிநீர் குழாய் அமைத்து தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். சமூக விரோதி கள் உள்ளே செல்ல முடியாத வகையில் &nbsp;கண்காணிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார். இதுகுறித்து ஏற்க னவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி &nbsp;வேலம்பாளையம் கிளைகளின் சார்பில் முதலாம் மண்டல அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடுகாட்டின் மோசமான நிலை &nbsp;குறித்து அருகிலுள்ள குடியிருப்பாளர்க ளும் கவலை தெரிவித்துள்ளனர். இந்த &nbsp;இடுகாடு பயங்கரமான இடமாக மாறி யுள்ளதால் செல்லவே தயங்குவதாக வும், மாநகராட்சி உடனடியாக தலை யிட்டு இதை சீரமைக்க வேண்டும். இந்த &nbsp;இடுகாடு ஒரு பொது இடமாக இருப்ப தால், மாநகாராட்சி நிர்வாகம் தலையிட &nbsp;வேண்டும். சுகாதாரமற்ற நிலையில் உள்ள இந்த இடம் பல்வேறு நோய்க ளை பரப்புவதற்கும் வழிவகுக்கும். எனவே, உடனடியாக இதன் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.