முந்தய பக்கம்

பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு!

24 Feb 2026, 3:55 pm
பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு!
<p><strong>பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு!</strong></p> <p>தருமபுரி, பிப்.24- நீர்வரத்து வெகுவாக குறைந்ததால், ஒகேனக்கல் காவிரி ஆறு பாறைகளாக காட்சியளிக்கிறது. கர்நாடகா மாநிலம், குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தமிழக எல்லையான தருமபுரி மாவட்டம், பிலி குண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வருகிறது. மேலும், கர்நாடகா அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் போது, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு வெள்ளமாக ஓடும். அப்போது அங்குள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட் டும். இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கர் நாடகா, ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந் தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மெயின் அருவி, காவிரி ஆற்றில் குளிப்ப தோடு பரிசலில் சென்று மகிழ்வர். கடந்த சில மாதங்களாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கி யது. தற்பொழுது விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் வந்து &nbsp;கொண்டிருக்கிறது. நீர்வரத்து குறைந்துள்ளதால் கரை புரண்டு ஓடிய ஒகேனக்கல் காவிரி ஆறு, தற்பொழுது வெறும் பாறைகளாக காட்சியளிக்கிறது. ஆர்ப்பரித்துக் கொட்டிய ஐந்தருவி, மெயின் அருவி களையிழந்து வறண்டு காணப் படுகிறது. காவிரி ஆற்று பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டைப் போல காட்சியளிக்கிறது. இதனால் ஒகே னக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram