முந்தய பக்கம்

கொக்கும் காகமும்

27 Dec 2025, 12:15 pm
           கொக்கும் காகமும்
<p><strong>கொக்கும் காகமும்</strong></p> <p>&ldquo;படபட&rdquo;வென சிறகை அடித்த வாறு, ஒரு வடையை அலகில் &nbsp;கொத்திக் கொண்டு குளக்கரை யில் உள்ள வேப்ப மரத்தில் வந்து உட்கார்ந்தது காக்கா. குளத்தில் தான் சாப்பிடுவதற்கு மீன்கள் &nbsp;கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது கொக்கு. மரத்தில் வந்து உட்கார்ந்த காகத்தைப் பார்த்து &ldquo; என்ன காக்கா அண்ணே, ரொம்ப &nbsp;மகிழ்ச்சியா இருக்கிறீங்க? &ldquo;என்று கேட்டது &nbsp;கொக்கு. &ldquo;ஆமாம்! பாட்டி இப்போதுதான் வடை &nbsp;சுட்டு சட்டியில் போட்டாங்க. நான் அதைப் &nbsp;பாட்டிக்குத் தெரியாமல் எடுத்துட்டு பறந்து &nbsp;ஓடி வந்துட்டேன்.இப்போ சாப்பிடப் போறேன்&rdquo;. வடையைச் சாப்பிட்டுக் கொண்டே &ldquo;என்ன கொக்கு தம்பி, உனக்கு இன்னும் மீன் கிடைக்கலையா?உன்னைப் பார்த்தால் பாவமா இருக்கு. கொஞ்சம் வடை சாப்பிடறயா?&rdquo; என்றது காகம். &ldquo;வேணாம் அண்ணே &ldquo; காக்கா தொடர்ந்து பேசியது, &ldquo;கொக்கு தம்பி,உனக்கு சாமர்த்தியமே இல்ல. அங்க பாரு ஒரு ஆள் வலையில மீன் பிடிச்சு &nbsp;கூடையில் எடுத்துப் போட்டுகிட்டு இருக்கார். நீ அங்கே போய் அதுல ரெண்டு &nbsp;மீன அவருக்குத் தெரியாம தூக்கிட்டு ஓடிவா!&rsquo; என்று சொல்லிவிட்டு பறந்து போனது. இரண்டு நாட்களுக்குப் பிறகு காகம் சோகமாக வேப்ப மரத்தில் வந்து உட்கார்ந்தது. அதைப் பார்த்த கொக்கு&rdquo; காக்கா அண்ணே!ஏன் சோகமா இருக்கீங்க?&rdquo;எனக் கேட்டது &nbsp;என்னத்தச் சொல்ல? இன்னைக்கும் பாட்டிகிட்ட இருந்து வடையைத் திருட லாம்னு போனேன். அப்போ பாட்டியோட பேரன் ஓடி வந்து என் முதுகில் தடியால அடிச்சிட்டான். நான் உயிர் தப்பிச்சு வந்தததே பெரிய சாதனையாப் போச்சு &ldquo;என்று சொன்னது. உடனே கொக்கு &ldquo;அண்ணே, நான் ஒரு &nbsp;விஷயம் சொல்றேன். தப்பா நினைச்சுக் காத.எப்பவுமே நமக்கு வேணுங்கறத நாம உழைச்சு தான் சாப்பிடணும். நீ பாட்டிய ஏமாத்தித் திருடப் போனதுதால தான் அடிவாங்கிட்டு வந்திருக்க&rdquo; என்றது. மேலும் &ldquo;என்னைப் பார்! ரொம்ப நேரம் &nbsp;இந்த சகதியிலும் தண்ணியிலும் கால் வலிக்க காத்திருக்கிறேன். எனக்குத் தேவை யான மீன் வந்த பிறகு அதைக் கொத்திச் சாப்பிடறேன்&rdquo; என்று சொல்லிவிட்டு மீனை &nbsp;அலகில் பிடித்த படியே பறந்து போனது. சிறிது நேரம் கொக்கு போன திசையை யே பார்த்துக் கொண்டிருந்த காகம் தனக்கான சாப்பாட்டைத் தேடிப் பறந்து சென்றது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram