தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புத்தகத் திருவிழா இன்று நிறைவு பெறுகிறது!

2 Feb 2026, 4:51 pm
புத்தகத் திருவிழா இன்று நிறைவு பெறுகிறது!
<p><strong>புத்தகத் திருவிழா இன்று நிறைவு பெறுகிறது!</strong></p> <p>திருப்பூர், பிப்.2- தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட &nbsp;நிர்வாகம், திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் &nbsp;இணைந்து நடத்திய 22 ஆவது புத்தகத் &nbsp;திருவிழா செவ்வாயன்று (இன்று) நிறை வடைகிறது. ஆண்டுதோறும் திருப்பூர் மக்களின் &nbsp;பண்பாட்டு திருவிழாவாக வெற்றிகர மாக நடைபெற்று வரும் புத்தகத் திரு விழா, இந்தாண்டு ஜன.24ஆம் தேதி தொடங்கியது. கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் புத்தகத் திரு விழாவிற்கு பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வருகை தந்தனர். புத்தக &nbsp;ஆர்வலர்கள் ஆர்வத்துடன் தங்களுக்கு &nbsp;தேவையான புத்தகங்களை தேர்ந் தெடுத்து வாங்கிச் சென்றனர். சென்னை &nbsp;புத்தகக் கண்காட்சி நிறைவடைந்தவு டன் நடைபெறும் புத்தகத் திருவிழா &nbsp;என்பதால், இந்தாண்டு வெளியிடப் பட்ட புதிய புத்தகங்கள் ஏராளமாக, புத் தக அரங்குகளில் வைக்கப்பட்டிருந் தன. குறிப்பாக பாரதி புத்தகாலயத் தில் சூர்யா சேவியர் எழுதிய திருப்பரங் குன்றம் முழு வரலாற்று ஆய்வு என்ற நூல் மக்களை ஈர்த்து, பெருமளவு விற் பனையானது. அதேபோல் கிழக்கு பதிப் பகத்தில் தூக்கு செல்வம் எழுதிய ஒரு &nbsp;தூக்குக் கைதியின் வாக்குமூலம் என்ற &nbsp;நூல், எழுத்தாளர் சோம. வள்ளியப்பன் &nbsp;எழுதிய சிவப்பு நிற மிதிவண்டி, கதை &nbsp;வழி குடும்ப பொருளாதாரம் என்ற &nbsp;நூலும் இந்த ஆண்டு புதிய வருகை யாக வாசகர்களிடம் வரவேற்பை பெற் றுள்ளன. &nbsp;நியூ செஞ்சுரி புத்தக நிலையம் விற் பனையகத்தில் புதிய வரவாக நூற்றுக் கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங் கள் இடம் பெற்றிருந்தன. இயல் வாகை &nbsp;அரங்கத்தில் நம்மாழ்வார் நூல்களும், &nbsp;பல்வேறு வகையான நாட்டு காய்கறி &nbsp;விதைகளும் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. புத்தகக் கண்காட்சி &nbsp;அரங்கத்தில் உள்ள விற்பனையாளர்க ளிடம் கேட்டபோது, வழக்கமாக எழுத் தாளர் சு.வெங்கடேசனின் வேள்பாரி நாவல் இந்தாண்டும் அதிகமாக விற் பனையானது என்று தெரிவித்தனர். காலை நேரத்தில் வருகை தரும் பள்ளி &nbsp;மாணவ, மாணவிகள் ஏராளமானோர் சிறுகதைகள், காமிக்ஸ் புத்தகங்கள், அறிவியல் புத்தகங்கள் போன்ற வற்றை வாங்கிச் சென்றனர். குழந்தை களுக்கான புத்தகங்கள் அதிக அளவில் &nbsp;விற்பனையானதாகவும் பதிப்பகத்தார் தெரிவித்தனர். தன்னம்பிக்கை நூல் கள், கதை, சுயசரிதை, வரலாறு, பணம் குறித்த நூல்கள் விற்பனையானது. ஆங்கில நூல்களும் சலுகை விலை யில் விற்கப்பட்டதால் பலர் வாங்கிச் சென்றனர். &nbsp;சிறைத்துறை சார்பில் வைக்கப் பட்டிருந்த அரங்கில் கைதிகள் படிப்ப தற்காக என புத்தகங்கள் சேகரிக்கப்பட் டன. பலர் தங்கள் வீடுகளில் இருந்த பழைய புத்தகங்களை கொண்டு வந்து &nbsp;கொடுத்தனர். மேலும் சிலர் புத்தகக் கண்காட்சியிலேயே விருப்பமான புத் தகங்களை வாங்கி அங்கு ஒப்படைத்த னர். இந்த புத்தகத் திருவிழாவில் பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உற்சாகத்து டன் வருகை தந்தனர். விடுமுறை தின மான ஞாயிறன்று பார்வையாளர்கள் &nbsp;கூட்டம் நிரம்பி வழிந்தது. அன்று &nbsp;மாலை, &ldquo;இன்றைய சூழ்நிலையில் &nbsp;சமூக பற்று வளர்ந்திருக்கிறதா? &nbsp;தளர்ந்திருக்கிறதா?&rdquo; என்ற தலைப் பில் சிறப்பு பட்டி மன்றம் நடைபெற் றது. நடுவர் பேராசிரியர் சிவகாசி ராமச் சந்திரன் இரு தரப்பு வாதங்களை கேட்டு இன்றைய சூழ்நிலையில் சமூ கப்பற்று தளர்ந்திருக்கிறது, வளர வேண்டும் என்று ஆசைப்படுவதாக தீர்ப்பளித்தார். திங்களன்று மாலை &nbsp;நடைபெற்ற கருத்தரங்கில் இலக்கிய மும், திரைப்பட பாடல்களும் என்ற தலைப்பில் கவிஞர் யுக பாரதி உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, செவ்வாயன்று (இன்று) நிறைவடையும் புத்தகத் திரு விழாவில் கடைசி நாள் விற்பனை என்ப தால் ஏற்கனவே புத்தகங்களை தேர்ந் தெடுத்து சென்றிருக்கும் புத்தக ஆர்வ லர்கள் அதிக அளவில் இங்கு வந்து &nbsp;தேர்வு செய்த புத்தகங்களை வாங்கிச் &nbsp;செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கடைசிநாள் கருத்தரங்கில் &lsquo;நூலும் நூல்களும்&rsquo; எனும் தலைப்பில் &nbsp;பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை யாற்றுகிறார். 11 நாட்கள் நடைபெற் றிருக்கும் புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்கள் வருகை, புத்தக விற் பனை உள்ளிட்ட விபரங்கள் செவ்வா யன்று முழுமையாக தெரியவரும் என்று புத்தகத் திருவிழா ஏற்பாட்டா ளர்கள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.