தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உலக நாடுகள் பாராட்டிய திட்டத்தை பாஜக அரசு ஒழித்துக் கட்ட முயல்கிறது! கே. பாலகிருஷ்ணன் சாடல்

24 Dec 2025, 3:39 pm
உலக நாடுகள் பாராட்டிய திட்டத்தை  பாஜக அரசு ஒழித்துக் கட்ட முயல்கிறது! கே. பாலகிருஷ்ணன் சாடல்

உலக நாடுகள் பாராட்டிய திட்டத்தை  பாஜக அரசு ஒழித்துக் கட்ட முயல்கிறது! கே. பாலகிருஷ்ணன் சாடல்

விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்பப் பெறக் கோரி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தை ரத்துசெய்த ஒன்றிய அரசைக் கண்டித்து, டிசம்பர் 23 அன்று இடதுசாரிக் கட்சிகள் சார்பில் தான்  ஆர்ப்பாட்டம் நடைபெறு வதாக இருந்தது. ஆனால், முத லமைச்சர் மு.க. ஸ்டாலின், கூட்டணி சார்பிலேயே நடத்தலாம் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தற்போது மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் அனுபவிக்கும் சலுகைகள், திட்டங் களை பறித்து வரும் மோடி அரசு,  மறுபுறத்தில், நாட்டையே கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கு தாரைவா ர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள் ளது. 2004-ஆம் ஆண்டு ஐமுகூ-1 அரசு இடதுசாரிகளின் ஆதரவோடு அமைந் தது. அப்போது, அமைச்சரவையில் தேவையான இலாக்காக்களை எடுத்துக் கொள்ள கூறியபோது, இடது சாரிகள் அமைச்சர் பதவியை ஏற்க வில்லை. மாறாக, 3 கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில் ஒன்றுதான் நூறுநாள் வேலை திட்டம் என்கிற இந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதிச் சட்டம். ஆனால், மோடி பதவியேற்ற பிறகு படிப்படியாக இந்த திட்டத்தை சீர்குலைக்கும் வேலையை செய்தார். 15 நாட்களில் ஊதியம் தர  வேண்டும் என்பதை மாற்றி 200 நாட்கள் தாமதமாக தரலாம் என்று மாற்றப் பட்டது. ஆண்டுதோறும் ஒதுக்கீட்டை  குறைத்து, இறுதியாக 65 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கி னார்கள். இதன் தொடர்ச்சியாகத் தான், ‘விபி ஜி ராம் ஜி’ சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டத்தை நிறைவேற்ற முனைந்தபோது, நாடாளுமன்றத்தில் மசோதா நகலை கிழித்தெறிந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்காக, போராட்டம் நடத்திய இடதுசாரிகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி களின் உறுப்பினர்கள் மீது தற்போது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம். விவசாயம் இயந்திரமயமாகி விட்ட நிலையில் தான், கிராமப்புறங் களுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் பட்டினிச்சாவை தடுத்த தாக உலக நாடுகளும், பொருளாதார மேதைகளும் இந்த திட்டத்தைக் குறிப்பிட்டு பின்னாளில் பாராட்டினர். அந்தச் சிறப்பான திட்டத்தைத்தான் ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. அதேபோல தொழிலாளர்கள் போராடிப் பெற்ற சட்டங்களைப் பறித்து விட்டு, 4 சட்டத் தொகுப்புகளை கொண்டு வந்துள்ளனர். அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அணு சக்தி துறையை திறந்து விட்டுள்ளனர். அம்பானி, அதானிக்காக பாட்டாளி மக்களின் வயிற்றில் அடிக்கும் வகை யில் ஜிராம்ஜி திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். 125 நாட்கள் வேலை கொடுப்பது உண்மையென்றால் முழுத் தொகையையும் ஒன்றிய அரசுதானே செலவிட வேண்டும். மாறாக, மாநி லங்கள் 40 விழுக்காடு நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறியிருப்பது ஏன்? மாநில வருவாயையெல்லாம் ஒன்றிய அரசு பறித்துக் கொண்டிருக்கிற நிலை யில், மாநில அரசுகளால் எப்படி செலவிட முடியும்? மாநில அரசுகள் மீது பழியை சுமத்தும் வகையில் சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். ஒன்றிய அரசு கொண்டு வந்த ‘விபி ஜி ராம் ஜி’ சட்டத்தைத் திரும்பப் பெறாவிடில் 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணியை மீண்டும் தோற்கடிப்பது மட்டுமல்லாது, ஒன்றிய அரசிலிருந்தும் பாஜகவை அகற்றுவோம். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் பேசினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.