முந்தய பக்கம்

குடிநீர் வசதி கேட்ட விதொச கோரிக்கை வெற்றி!

2 Dec 2025, 4:11 pm
குடிநீர் வசதி கேட்ட விதொச கோரிக்கை வெற்றி!
<p><strong>குடிநீர் வசதி கேட்ட விதொச கோரிக்கை வெற்றி!</strong></p> <p>ஈரோடு, டிச.2- எழுமாத்தூர் ஊராட்சியில் குடிநீர் வசதி செய்ய தர வேண் டும் என்ற அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் &nbsp;கோரிக்கை நிறைவேற்றப்பட் டுள்ளது. ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி ஒன்றியம், எழுமாத்தூர் ஊராட்சிக்குட்பட்டது மண்கரடு கணபதி நகர். இங்கு வசிக்கும் மக்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் கீழ் தண்ணீர் வழங்கப்பட்டது. ஆனால், அப் பகுதி மக்கள் அதனை குடிநீராகப் பயன்ப டுத்துவதில்லை. மாறாக ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து வரும் தண்ணீரை சின் டெக்ஸ் தொட்டி மூலம் பெற்று குடிநீராகப் பயன்படுத்தி வந்தனர். இத்தொட்டிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை சரிந்து விழுந் ததில், சின்டெக்ஸ் டேங்க் உடைந்து விட்டது. &nbsp;இதனால் பல மாதங்களாக மக்கள் குடிநீர் பிடிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். அதேசமயம் ஜல் ஜீவன் திட்ட &nbsp;குழாய்களும், சாலை விரி வாக்கப்பணிகள் காரணமாக உடைந்துவிட்டது. இதனால் தண்ணீர் வசதியின்றி சிரமப் பட்டு வந்த நிலையில், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் சார்பில், கடந்த ஜூலை மாத இறுதியில் மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. &nbsp;அதன்பேரில் 15 ஆவது நிதிக் குழு மானி யத்தில் தமிழக அரசின் சார்பில், ரூ.72 ஆயி ரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மேடை அமைத்து புதிதாக 2 ஆயி ரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் &nbsp;தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அகில இந் திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அர சுக்கும், ஊராட்சி மன்றத்திற்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram