அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக கிராம
10 Dec 2025, 4:08 pm
<p>அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ரத்த கையெழுத்து இயக்கம் பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது. இதில் மாநிலச் செயலாளர் கார்த்தி, வட்டத் தலைவர் மணிவாசகம், செயலர் மேகநாதன், பொருளாளர் மாரியப்பன், துணைத் தலைவர்கள் பங்கேற்றனர்.</p>
