வால்பாறை மலைக் கிராமங்களின் அடிப்படைத் தேவைகளும்...
29 Mar 2026, 3:34 pm
<p><strong>வால்பாறை மலைக் கிராமங்களின் அடிப்படைத் தேவைகளும்...</strong></p>
<p>மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில், பசுமை போர்த்திய தேயிலைத் தோட்டங்களும், ஆர்ப் பரிக்கும் அருவிகளும் நிறைந்த வால் பாறை சட்டமன்றத் தொகுதி, பெரும் அரசியல் மாற்றத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கிறது. சுமார் 1,72,284 வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில், பெண் வாக்கா ளர்களின் எண்ணிக்கை (90,759) ஆண்களை விடக் கூடுதலாக இருப்பது, இம்முறை பெண்களின் தீர்ப்பே வெற்றியாளரை தீர்மானிக் கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. நான்கு தலைமுறைகளுக்கு முன்பு காடுகளைத் திருத்தி தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய பாட் டாளிகளின் வாரிசுகள் இன்றும் குத் தகை நிலங்களிலேயே வசித்து வரு கின்றனர். பல எஸ்டேட்களின் குத் தகை காலம் முடிவடைய உள்ள நிலை யில், அந்த நிலங்களை அரசு கையகப்படுத்தி, தொழிலாளர்க ளுக்கு சொந்த வீடும், இடமும் வழங்க வேண்டும் என்பது இத் தொகுதி மக்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. வன உரிமைச் சட்டம் 2006-ன் படி, வனப்பகுதியில் வாழும் ஒவ்வொரு பழங்குடியின குடும்பத்திற்கும் 10 சென்ட் குடியிருப்பு நிலமும், 9 ஏக்கர் விவசாய நிலமும் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மலைக் கிராமங்களில் பலமாக உள்ளது. இடம்பெயர்தலைத் தடுக்க வேண்டும் தேயிலைத் தொழில் மட்டுமே பிரதானமாக இருப்பதால், போதிய வருமானமின்றி நூற்றுக்கணக் கான குடும்பங் கள் சமவெளிப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வரு கின்றன. ஆனைமலை, கோட்டூர் போன்ற பகுதி களை மையப்படுத்தி தென்னை எண் ணெய் தயாரித்தல், கயிறு திரித் தல் மற்றும் தென்னை மட்டை துகள் களை ஏற்றுமதி செய்யும் அரசு தொழிற் சாலைகளை உருவாக்க வேண்டும். இது இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் உள்ளூரிலேயே வேலைவாய்ப்பை வழங்கும். கேரள மாநிலத்தைப் போல தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தின சரி குறைந்தபட்ச ஊதியம் 650 ரூபாய்க்கு மேல் உயர்த்தி வழங்கப் பட வேண்டும். ஆனைமலைப் பகுதியில் ஏழை எளிய மற்றும் பழங்குடியின மாண வர்கள் பயன்பெறும் வகையில் அரசு கலைக் கல்லூரி மற்றும் பாலி டெக்னிக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, மாசாணி யம்மன் கோயில் நிதியைப் பயன்ப டுத்தி ஒரு தொழில்நுட்பக் கல் லூரியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. வால்பாறை அரசு மருத்துவமனையை 24 மணி நேர அவசர சிகிச்சை வசதி களுடன் தரம் உயர்த்த வேண்டும். வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்து வமனையை தாலுகா தலைமை மருத்துவமனையாக மாற்ற வேண் டும். மேலும், மூலிகைகள் நிறைந்த இப்பகுதியில் ஒரு அரசு சித்த மருத் துவக் கல்லூரி அமைக்கபட வேண் டும். சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆனைமலை ஆற்று நீரை ஆதார மாகக் கொண்டுள்ள பேரூராட்சிக ளின் கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்து, நவீன கழிவுநீர் மேலாண் மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆனைமலை நகரப் பகுதி யில் தீயணைப்பு நிலையம் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவை அமைப்பது அவசர காலங்களுக்குப் பெரும் உதவி யாக இருக்கும். திமுகவிற்குச் சாதகமாகத் திரும்பும் களம்? கடந்த காலங்களில் அதிமுகவின் வசமிருந்த இத்தொகுதி, தற்போது திமுக பக்கம் சாயப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் விடியல் பயணம் திட்டங்கள் தோட்டத் தொழிலாளப் பெண்களிடையே திமுகவிற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாக ரீதி யான முன்னேற்றங்கள் மற்றும் உள் ளாட்சித் துறையின் செயல்பாடுகள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள் ளன. இடதுசாரி கட்சிகள் மற்றும் காங் கிரஸ் கட்சிகளின் வலுவான வாக்கு வங்கி திமுகவிற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. காலங்காலமாக நிறைவேற்றப் படாத கோரிக்கைகளை நிறை வேற்றும் வல்லமை கொண்ட புதிய அரசைத் தேர்ந்தெடுக்க வால் பாறை மக்கள் ஆவலுடன் காத் திருக்கின்றனர். தற்போதைய சூழ லில், அரசு மீதான நம்பிக்கை யும் நலத்திட்டங்களின் பல மும் வால்பாறையை திமுகவின் வச சமாக்கும் என்றே கள நிலவரங் கள் தெரி விக்கின் கின்றன.</p>
