கியூபாவின் மூச்சுக்குழாயை நெரிக்கும் ஏகாதிபத்தியத்தின் கொடுங்கரங்கள்! - எம்.கண்ணன்
21 Mar 2026, 2:42 pm
<p><strong>கியூபாவின் மூச்சுக்குழாயை நெரிக்கும் ஏகாதிபத்தியத்தின் கொடுங்கரங்கள்!</strong></p>
<p>ஒரு தேசத்தின் மீது குண்டுகளை வீசி அழிப்பதை விட, அந்தத் தேசத்து மக்களின் அடுப்பங் கரையை அணைத்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்கும் தண்ணீரைத் தடுத்து, இருளில் தள்ளி வேடிக்கை பார்ப்பது எத்தகைய கொடூரம்? இன்று கியூபா சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடி என்பது பொருளாதார வீழ்ச்சி அல்ல; அது மானுடத்தின் மீதான ஒரு திட்டமிட்ட ‘பொருளாதார பயங்கரவாதம்’. “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்” என்ற உன்னதமான சோசலி சக் கனவைச் சுமந்ததற்காக, ஒரு குட்டித் தீவு நாட்டை உலக வரைபடத்திலிருந்து அழித்துவிடத் துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்மம் இது. கடல்சார் முற்றுகை ஒருபுறம், அதன் நட்பு நாடான வெனிசுலாவைச் சிதைத்து எரிபொருளைத் தடுத்தது மறுபுறம் என, கியூபாவின் கழுத்து இன்று மிகக் கடுமை யாக நெரிக்கப்படுகிறது. ஆனால், 60 ஆண்டுகாலமாகத் தடைகளைத் தகர்த்து நின்ற அந்தச் சோசலிச வீரம், இன்று தன் மக்களின் உயிரைக் காக்கப் பேச்சுவார்த்தை மேசைக்குத் துணிச்ச லுடன் வந்திருக்கிறது. கியூபாவின் கண்ணீ ரும், அதன் தளராத போராட்டமும் நமக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறது: நாம் எந்தப் பக்கம் நிற்கிறோம்? மனிதா பிமானமற்ற முதலாளித்துவத்தின் பக்கமா அல்லது மனித உயிர்களை நேசிக்கும் சோசலிசத்தின் பக்கமா? கியூபாவின் கள நிலவரம்: ஒரு துயரப் பின்னணி கியூபாவின் இன்றைய நெருக்கடி நிலை குறித்து அந்நாட்டில் உள்ள வர்களிடம் பேசியபோது, “இங்கே நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டினால் சாலைக ளில் வாகனப் போக்குவரத்து சீரற்று இருக்கிறது. பொதுப் போக்குவரத்து என்பது கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்று சொல்லலாம். அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை காரணமாக, மிகக் குறைவான கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களே ஓடிக்கொண்டிருக்கின் றன. எங்களுக்கு முக்கிய எரிபொருள் வழங்குநராக வெனிசுலா இருந்து வந்தது. ஆனால் அங்கோ இப்போது ஏற்பட்டி ருக்கும் அரசியல் நெருக்கடி மற்றும் இந்த முற்றுகையும் சேர்ந்து கொண்டதால், எரிபொருள் வந்து சேருவது இன்னும் கடினமாகியுள்ளது” என்கிறார்கள். மின்சாரம் மற்றும் சுகாதாரச் சீர்கேடு கியூப மக்கள் ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் இருக்கிறார்கள். எரிபொருள் இல்லாததால், அனல் மின் நிலையங்கள் சரியாக இயங்க முடிவதில்லை. கியூபா வின் மின்சாரக் கட்டமைப்பு சிதைந்து போவதற்கு முக்கியக் காரணம், அங்குள்ள இயந்திரங்கள் அனைத்தும் பல பத்தாண்டுகள் பழமையானவை. புதிய உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்ய அமெரிக்கத் தடைகள் முட்டுக் கட்டையாக உள்ளன. இதனால், ஒரு சிறிய பழுது ஏற்பட்டாலும் அதைச் சரி செய்ய மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இது அந்த நாட்டு மக்க ளின் அன்றாட வாழ்வை மட்டுமல்லாது, தொழில்துறை உற்பத்தியையும் முற்றிலு மாக முடக்கியுள்ளது. இதனுடன், குப்பை லாரிகளுக்கு எரிபொருள் இல்லாததால், ஒவ்வொரு தெரு முனையிலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குப்பைகள் தேங்குவதால் நோய் பரவல் அபாயம் அதிகரித்துள்ளது. கல்வி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு பள்ளிகள் ஒரு வேளை மட்டுமே இயங்குகின்றன. மதிய உணவிற்காக மாணவர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டி யுள்ளது. அதேபோல், மின்சாரம் இல்லாத தால் வீடுகளுக்குத் தண்ணீர் இறைக்க முடியவில்லை. சில வீடுகளில் 20 நாட்க ளுக்கும் மேலாகத் தண்ணீர் இல்லை. ஒரு லாரி தண்ணீரின் விலை 30,000 கியூபன் பெசோக்கள் வரை விற்கப்படுகிறது. இது ஒரு சாதாரண ஊழியரின் குறைந்தபட்ச ஊதியத்தை விட 10 மடங்கு அதிகம். உணவுப் பொருட்கள் தட்டுப்பாடாகவும், மிக அதிக விலையிலும் விற்கப்படு கின்றன. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: இறையாண்மைக்கான குரல் இந்தக் கடுமையான சூழலில் மக்க ளைக் காப்பாற்றுவதே முன்னுரிமை என்ற அடிப்படையில் கியூப அரசு அமெரிக்கா வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ராணுவ தலைமைத் தளபதி ரவுல் காஸ்ட்ரோ ரூஸ் மற்றும் கியூப கம்யூ னிஸ்ட் கட்சியின் முதன்மைச் செயலா ளரும் ஜனாதிபதியுமான மிகுயெல் தியாஸ் கானல் பெர்முடெஸ் ஆகியோ ரின் தலைமையில், அமெரிக்க அர சாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கியூப அதி காரிகள் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். இதுகுறித்து ஜனாதிபதி தியாஸ் கானல் கூறுகையில், “இந்தப் பேச்சு வார்த்தைகளில், கியூபா தரப்பு சமத்து வத்தின் அடிப்படையிலும், இரு நாடுகளின் அரசியல் அமைப்புகள், இறையாண்மை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகிய வற்றிற்கு மதிப்பளிக்கும் வகையிலும் செயல்படத் தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார். எரிசக்தி நெருக்கடியும் “எண்ணெய்க்குப் பதில் மருத்துவர்கள்” திட்டமும் வெனிசுலா மற்றும் கியூபா இடையே 2000-ஆம் ஆண்டில் கையெ ழுத்தான ஒப்பந்தத்தின்படி, வெனிசுலா கியூபாவிற்கு மானிய விலையில் எரி பொருளை வழங்கியது. அதற்குப் பதிலாக, ஆயிரக்கணக்கான கியூப மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெனிசுலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2026-இன் தொடக்கத்தில் வெனிசுலா வில் ஏற்பட்ட அமெரிக்காவின் நேரடித் தலையீடு மற்றும் அரசியல் சூழல் மாறியுள்ள நிலையில், கியூபாவிற்குச் செல்ல வேண்டிய எண்ணெய்க் கப்பல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் டொனால்டு டிரம்ப்பின் கடுமையான மிரட்டல்கள் காரணமாக, வெனிசுலா மட்டுமன்றி மெக்சிகோ போன்ற நாடுகளும் விநியோகத்தை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன. அமெரிக்கா கியூபாவின் மீது விதித் துள்ள இந்தத் தடைகள் நேற்று இன்று தொடங்கியவை அல்ல. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு நாட்டின் இறையாண்மையைப் பறிக்க முனையும் இத்தகைய பொருளாதாரத் தடைகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரா னவை என ஐக்கிய நாடுகள் சபை தொ டர்ந்து எச்சரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐநா பொதுச் சபையில் கியூபாவிற்கு எதிரான தடையை நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அமெரிக்கா அதைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது. சோசலிசத்தின் சாதனையும் சர்வதேச சமூகத்தின் கடமையும் ஏன் அமெரிக்கா கியூபாவை இவ்வளவு வன்மத்தோடு அணுகுகிறது? காரணம், அமெரிக்காவின் வாசலிலேயே “அனைவ ருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்தர மருத்துவம், அனைவருக்கும் வீடு” என்ற சோசலிசக் கொள்கையை கியூபா வெற்றி கரமாகச் செயல்படுத்திக் காட்டியதுதான். மருத்துவத்திலும் கல்வியிலும் கியூபா படைத்த சாதனைகளை உலகமே வியந்து பார்க்கிறது. தற்போது அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் கொடுங்கரங்கள் நீண்டுள்ள நிலையில், கியூபாவின் இந்த இக்கட்டான நிலையில், உலகெங்கிலும் உள்ள முற்போக்குச் சக்திகள் கியூபாவிற்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, நோய்கள் பரவி வரும் சூழலில், உலக சுகாதார நிறு வனம் தலையிட்டு, கியூபாவிற்குத் தேவை யான அத்தியாவசிய மருந்துகள் தடை யின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கியூபா இன்று சந்திக்கும் பின்ன டைவு என்பது தற்காலிகமானது. காரல் மார்க்ஸ் கூறியது போல, “முதலாளித்து வம் தனக்கான சவக்குழியைத் தானே தோண்டிக் கொள்கிறது. மனிதாபிமான மற்ற ஏகாதிபத்திய அணுகுமுறைகள் மனித குலத்திற்கே எதிரானது. முதலா ளித்துவம் வீழும்; சோசலிசம் வெல்லும்!” என்பது வெறும் முழக்கம் அல்ல, அது வரலாற்றின் தவிர்க்க முடியாத நியதி.<br />
</p>
