அதானிக்காக ஆபத்துக்குள்ளாகும் ஆரவல்லி மலைத்தொடர்!
25 Dec 2025, 4:24 pm
<p><strong>அதானிக்காக ஆபத்துக்குள்ளாகும் ஆரவல்லி மலைத்தொடர்!</strong></p>
<p>உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி, தில்லிக்கு அருகில் தொடங்கி ஹரி யானா, ராஜஸ்தான் வழியாக குஜ ராத்தின் அகமதாபாத் வரை சுமார் 700 கி.மீ நீளத்திற்குப் பரந்து விரிந்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய இயற்கை அரண்களுள் ஒன்றான இம்மலைத் தொடர், அதானி உள்ளிட்ட கனிம முதலாளி களின் லாப வேட்டைக்காக தற் போது மரண விளிம்பிற்குத் தள் ளப்பட்டுள்ளது. புதிய வரையறை எனும் தொழில்நுட்பச் சதி ஆரவல்லி மலைகள் குறித்த தெளிவான வரையறை தேவை என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டி ருந்த நிலையில், ஒன்றிய பாஜக அரசு ஒரு புதிய “தொழில்நுட்ப விளக்கத்தை” அளித்தது. அதன் படி,”100 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட குன்றுகள் மட்டுமே ஆர வல்லி மலைகளாகக் கருதப்படும்”. அதேபோல இரு குன்றுகளுக்கு இடையே உள்ள இடைவெளி 500 மீட்டருக்குள் இருந்தால் மட்டுமே அப்பகுதி ஆரவல்லி மலைத்தொட ரின் பகுதியாகக் கருதப்படும். இந்த ஆபத்தான வரையறையை நீதி மன்றம் தற்போது ஏற்றுக்கொண் டுள்ளது. இந்த முடிவால், சூழலி யல் ரீதியாக மிக முக்கியமான ஆர வல்லியின் பல பகுதிகள் இனி ‘பாது காக்கப்பட்ட பகுதிகள்’ என்ற அந் தஸ்தை இழக்கும். இது சுரங்கப் பணிகள், ரியல் எஸ்டேட் மற்றும் கார்ப்பரேட் உள்கட்டமைப்புத் திட் டங்களுக்கு ஆரவல்லியைத் தடை யின்றித் திறந்துவிடும் ஒரு திட்ட மிட்டச் சதியாகும். ஆரவல்லி தரும் இயற்கை பாதுகாப்பு ராஜஸ்தானின் தார் பாலை வனம் கிழக்கு நோக்கி விரிவடை வதைத் தடுக்கும் மாபெரும் இயற் கைச் சுவராக ஆரவல்லி செயல்படு கிறது. பாலைவனத்திலிருந்து வரும் மணல் புழுதியைத் தடுப்ப தோடு, சம்பல், சபர்மதி மற்றும் லூனி போன்ற முக்கிய நதிகளின் ஆதாரமாகவும் இது உள்ளது. நிலத்தடி நீரைச் சேமித்து வைக் கும் இந்தப் பெரும் நிலப்பரப்பு, மணற்கல், சுண்ணாம்புக்கல், பளிங்குக்கல், கிரானைட், ஈயம், தாமிரம், தங்கம் மற்றும் டங்ஸ்டன் உள்ளிட்ட அரிய கனிம வளங்க ளால் நிரம்பியுள்ளது. இந்த இய ற்கை வளங்களைச் சூறையாடவே 100 மீட்டர் உயர வரையறை எனும் ஆயுதத்தை பாஜக அரசு பயன் படுத்தியுள்ளது. 100 மீட்டருக்குக் குறைவான குன்றுகள் இனி மலை கள் அல்ல என அறிவிப்பதன் மூலம், அந்த நிலப்பரப்புகளைக் கனிமக் கொள்ளைக்குத் தாரை வார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 90% மலைகள் அழியும் அபாயம் இந்தத் தீர்ப்பானது, ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் உள்ள ஆர வல்லியின் பெரும்பகுதியைப் பாது காப்பிலிருந்து நீக்கிவிடும். இத னால் 90 சதவீத ஆரவல்லி மலை கள் அழியும் நிலைக்குத் தள்ளப் படும். ஏற்கனவே கடந்த பல தசாப் தங்களாகச் சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோதச் சுரங்கப் பணிகளால் இம்மலைத்தொடர் கடுமையாகச் சிதைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தா னில் மட்டும் சுமார் 31 மலைக்குன்று கள் முற்றிலும் காணாமல் போயுள் ளதாக முந்தைய ஆய்வுகள் எச்ச ரித்தன. இப்போது அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடனான தொழில் நுட்பப் போட்டியில் கனி மங்களை ஏற்றுமதி செய்ய, அதானி போன்ற கனிம முதலாளிகள் ஆர வல்லியைச் சட்டப்பூர்வமாகவே சூறையாட இப்புதிய வரையறை கதவுகளைத் திறந்து வைத்துள் ளது. வாழத் தகுதியற்ற வட இந்தியா தில்லி உள்ளிட்ட வட மாநிலங்க ளில் காற்று மாசு ஏற்கனவே மனி தர்களைக் கொல்லும் அளவிற்கு அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆரவல்லி மலைக் காடுகள் காற் றில் உள்ள நச்சுத் துகள்களை உறிஞ்சும் இயற்கை வடிகட்டியா கச் செயல்படுகின்றன. இம்மலைத் தொடர் சிதைக்கப்பட்டால், தார் பாலைவனப் புழுதி நேரடியாகத் தில்லியைத் தாக்கும். ஏற்கனவே ஏரிகள் வறண்டு, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் சூழலில், காடழிப்பு மற்றும் சுரங்கப் பணி கள் கிணறுகளில் நீர் சுரப்பதையே தடுத்துவிடும். இதன் விளைவாக, தில்லி-என்சிஆர் (Delhi-NCR) பகுதி மற்றும் பஞ்சாப், ஹரியானா வின் பல பகுதிகள் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பாலைவனமாக மாறும் பேரழிவு ஏற்படும். கார்ப்பரேட் நலனே பிரதானம் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் காற்று மாசு குறித்து விவாதிக்கக் கோரிக்கை விடுத்தும் பாஜக அரசு அதனை உதாசீனப்படுத்தியது. மாறாக, அதானி போன்ற முதலாளிகளின் நலனுக்காக ஆரவல்லியைப் பலியிட்டுள்ளது. குழந்தைகள், முதி யவர்கள் மற்றும் திறந்தவெளியில் வேலை பார்க்கும் ஏழை உழைப் பாளி வர்க்கத்தின் சுவாசக் காற் றைப் பறிக்கும் இந்தச் செயல், இயற்கையின் மீதான ஒரு பெரும் போர் நடவடிக்கையாகும். கடும் எதிர்ப்பிற்கு பிறகு ஆரவல்லி மலைப் பகுதியில் புதிய சுரங்கங் கள் ஏலம் விட தடைவிதிப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், நிலையான வளர்ச்சி என்ற போர்வையில் முன்வைக்கப்படும் இந்தத் தொழில்நுட்ப விளக்கம், ஆரவல்லி மலைத்தொடருக்கும் பிற மலைத் தொடர்களுக்கும் பாஜக அரசு அளித்துள்ள மரண தண்டனையாகவே அமையும். -சேது சிவன்</p>
<p> </p>
