தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘சமூக நீதிப் போராட்டங்களுக்கு வலிமை சேர்த்தவர்’ உ. நிர்மலாராணிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி புகழஞ்சலி!

18 Mar 2026, 3:34 pm
‘சமூக நீதிப் போராட்டங்களுக்கு வலிமை சேர்த்தவர்’ உ. நிர்மலாராணிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி புகழஞ்சலி!
<p><strong>&lsquo;சமூக நீதிப் போராட்டங்களுக்கு வலிமை சேர்த்தவர்&rsquo; உ. நிர்மலாராணிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி புகழஞ்சலி!</strong></p> <p>சென்னை, மார்ச் 18 - &lsquo;தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு மிகச் சிறந்த பங்க ளிப்பை வழங்கிய அன்புத் தோழர் நிர்மலா ராணி அவர்களின் மறைவு, சமூகநீதி இயக்கங்களுக்கு பேரிழப்பு!&rsquo; &nbsp;என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு &nbsp;முன்னணி புகழஞ்சலி செலுத்தி யுள்ளது. இதுதொடர்பாக முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு பொதுச்செயலாளர் பி. சுகந்தி ஆகி யோர் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான வழக்கு 2007-இல் தமிழ்நாடு தீண்டாமை &nbsp;ஒழிப்பு முன்னணி துவக்கப்பட்ட காலத்தில் இருந்து, அதன் பணிகளில் &nbsp;ஆகச்சிறந்த பங்களிப்புகள் செய்து &nbsp;வந்தவர் &nbsp;வழக்கறிஞர் உ. நிர்மலா ராணி அவர்கள். தமிழ்நாட்டின் சமூகநீதி போராட்டக் களத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மிக முக்கியமான பங்களிப்பு அருந்ததியர் மக்களின் உள் இடஒதுக்கீடு ஆகும். 2009-இல் &nbsp;அருந்ததியர் மக்களின் உள் இட ஒதுக்கீடு சட்டமானது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பலர் வழக்கை தொடர்ந்தனர். இதற்கு எதிராக உள் இடஒதுக் கீட்டை பாதுகாத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை &nbsp;ஒழிப்பு முன்னணியின் சார்பில் வழக்கை நடத்தி முத்திரை பதித்த தீர்ப்பினை பெற்றுத் தந்தவர் வழக்கறி ஞர் உ. நிர்மலாராணி. உத்தப்புரம் மக்களின் உரிமைக்கான போராட்டம் 2009-ஆம் ஆண்டு மதுரை மாவட் டம் உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் அகற்றம் என்கிற வரலாற்றுச் சிறப்பு &nbsp;மிக்க போராட்டத்திற்குப் பிறகு உத்தப் புரம் பட்டியலின மக்கள் மீது, கொடூர மான தாக்குதல் நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக் காக களத்தில் நின்று போராடின. &nbsp;அப்போதும், இக்கொடூரமான &nbsp;தாக்குதலை நீதிமன்றத்தின் கவ னத்திற்கு எடுத்துச் சென்று பாதிக்கப் பட்ட மக்கள் ரூ. 1 கோடிக்கும் &nbsp;மேலாக நிவாரணத்தொகை பெறு வதற்கு திறம்பட வழக்கை நடத்திய வர் தோழர் உ. நிர்மலாராணி அவர்கள். தற்போது வரை, உத்தப்புரத்தில் பட்டியல் சமூக மக்களின் வழிபாட்டு உரிமைக்கான வழக்கை நடத்தி வந்தவர். சாதி மறுப்பு திருமணத் தம்பதிகளுக்கான பாதுகாப்பு உசிலம்பட்டி விமலாதேவி வழக் கில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் &nbsp;தொடரப்பட்ட வழக்கில் சாதி &nbsp;மறுப்புத் திருமணம் செய்து கொள் ளும் தம்பதிகளை பாதுகாக்க அரசு நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நீதிமன்ற உத்தரவுகளாகப் பெற்றுத் தந்தவர். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கான சட்ட வரைவை வழக்கறிஞர்கள் குழுவுடன் &nbsp;இணைந்து தயாரித்து வழங்கியதில் மிகச்சிறந்த பங்களிப்புகளை வழங்கி யவர். சமூகநீதி மற்றும் பெண்ணுரிமைக் கான வழக்குகளில் வழிகாட்டுதல் களை வழங்கியதோடு பல முக்கிய வழக்குகளில் வழக்கறிஞர்களாக &nbsp;செயல்பட்டவர். இவ்வாறு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கிய அன்புத் தோழர் நிர்மலாராணி அவர்களின் &nbsp;மறைவு, சமூகநீதி இயக்கங்களுக்கு பேரிழப்பு. இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.