தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்

10 Feb 2026, 4:50 pm
உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்
<p><strong>உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்&nbsp;மாற்றுத்திறனாளிகள் மறியல்: கைது</strong></p> <p>கோவை, பிப்.10- தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித் தொகையை ஆந் திர மாநிலத்தில் வழங்குவதைப் போல &nbsp;ரூ.6000, ரூ.10,000 ரூ.15,000 என உயர்த்தி &nbsp;வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டு கைதாகினர். ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, ஒடிசா, பாண்டிச்சேரி போன்ற பகுதிக ளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக மான உதவித்தொகை வழங்கப்படு கிறது. &nbsp;ஆனால், தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை தரும் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு, &nbsp;மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகைகளை உயர்த்தி வழங்க வேண் டும் என வலியுறுத்தி தமிழ்நாடு &nbsp;அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தினர் செவ்வாயன்று தமிழ கம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். &nbsp;அதன்ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு &nbsp;நடைபெற்ற மறியலுக்கு சங்க மாவட்ட &nbsp;ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். இதில், துணை ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், மாநிலக்குழு உறுப்பினர் ஜெயந்தி உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு &nbsp;கைதாகினர். திருப்பூர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பாக நடைபெற்ற இந்த &nbsp;போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலச் செயலாளர் பா. ராஜேஷ் தலைமை ஏற்றார். இதில், மாவட்டத் தலைவர் லோகநா தன், செயலாளர் ஆர்.பழனிச்சாமி, &nbsp;பொருளாளர் ரோசி, துணைத்தலைவர் கள் மாலினி, ஜெயபால், துணைச் செய லாளர் குருசாமி, சுரேஷ் உள்ளிட்ட திர ளானோர், ஆட்சியர் அலுவலகம் முன் பாக பல்லடம் திருப்பூர் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அவர் களை கைது செய்து, வாகனத்தில் தனி யார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்ற னர். தொடர் மறியல் போராட்டம் அறி வித்திருக்கும் நிலையில் புதன்கிழமை யும் மறியல் நடைபெறும் என்று மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் தெரிவித்துள் ளனர். இதில் 110 பெண்கள் உட்பட 240 &nbsp;பேர் கைது செய்யப்பட்டனர். &nbsp;ஈரோடு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு சங்க &nbsp;மாவட்டத் தலைவர் டி.சாவித்திரி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் டி.சுப்பிரமணி கண்டன உரையாற்றினார். மாவட்டப் பொருளா ளர் சு.கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் வீ. ராஜு, எஸ்.ரேணுகா, ஏ.பி.ராஜு, எஸ். செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து &nbsp;கொண்டு கைதாகினர். சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு சங்க &nbsp;மாவட்டத் தலைவர் ஆர்.அமலா ராணி &nbsp;தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் எம். குணசேகரன், மாவட் டப் பொருளாளர் ஜான் பெர்னாண்டஸ் &nbsp;உள்ளிட்ட பலர் பங்கேற்று கைதாகி னர். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு மாவட்டத் தலைவர் ஜி.தமிழ் செல்வி தலைமை வகித்தார். மாவட்டப் பொரு ளாளர் ஜி. மாதேசன், மாவட்ட துணைத் தலைவர் கே.ஜி.கரூரான், மாவட்ட நிர் வாகிகள் பி. கே. மாரியப்பன், ஆதி மூலம், அண்ணாமலை, கே.சுசிலா, சி. &nbsp;வேலாயுதம், கே.காந்தி, சாமுண்டீஸ் வரி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு &nbsp;கைதாகினர். நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற மறியலில் சங்க &nbsp;மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.முருகே சன், மாவட்டத் தலைவர் நாகேஸ்வரி, பொருளாளர் அருண்குமார் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்று கைதாகினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.