பிரமிக்க வைக்கும் மக்கள் சீனம்: 3 ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பிய கல்விப் புரட்சி
17 Jan 2026, 2:42 pm
<p><strong>பிரமிக்க வைக்கும் மக்கள் சீனம்: 3 ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பிய கல்விப் புரட்சி</strong></p>
<p>ஒரு நாட்டின் வலிமை அதன் ராணுவத்தில் மட்டுமல்ல, அதன் வகுப்பறைகளில்தான் தங்கி யிருக்கிறது என்பதை மக்கள் சீனம் உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது. 19-ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய பிரிட்டன் திணித்த அபின் போர்களால் “அவமான நூற்றாண்டை” சந்தித்த சீனா, இன்று கல்வியின் மூலம் உலகையே ஆளும் அறிவுசார் வல்லரசாக மாறியி ருப்பது ஒரு மாபெரும் வரலாற்று அதிச யம். லாபம் வரும் என்றால் எதையும் செய்யத் துணியும் ஏகாதிபத்தியத்தின் கொடூர முகத்தை அபின் போர்களில் சீனா நேரடியாகக் கண்டது. வரலாற்றுப் பின்னணி: அடிமைத்தனமும் விழிப்புணர்வும் பிரிட்டனின் மிகவும் லாபகரமான ஒற்றை வர்த்தகச் சரக்காக அன்று அபின் இருந்தது. லாப வெறியால் சீனா மீது திணிக்கப்பட்ட இந்த நச்சான போதைப் பழக்கம், அந்நாட்டின் ஒட்டுமொத்த உற் பத்தித் திறனையும் சிதைத்தது. இதைத் தடுக்க முயன்ற சீன மன்னராட்சி, 1839 மற்றும் 1856-இல் நடந்த இரண்டு அபினிப் போர்களிலும் பிரிட்டன்-பிரான்ஸ் படைகளிடம் வீழ்ந்தது. இந்த அவமான கரமான தோல்வியே சீனச் சீர்திருத்தவாதி களைச் சிந்திக்கத் தூண்டியது. மேற்கத்திய நாடுகளின் நவீன ராணுவ வலிமைக்குக் காரணம் அவர்களின் அறி வியல் மற்றும் பொறியியல் கல்வியே என்பதை அவர்கள் உணர்ந்தனர். கிங் வம்சத்தின் இறுதிக்காலத்தில் அமெ ரிக்காவிற்குப் படிக்க அனுப்பப்பட்ட நூறு இளைஞர்களில் ஒருவரான ஜான் தியான்யோ போன்றவர்கள், பின்னாளில் சீனாவின் நவீனத் தொழில்நுட்பக் கட்ட மைப்பிற்கு அடித்தளமிட்டனர். இவர்கள் மேற்கத்திய அறிவியலை உள்வாங்கி, சீன மண்வாசனைக்கு ஏற்ப அதனைப் பயன்படுத்தியதே இன்று வரை நீடிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்தாக அமைந்தது. புரட்சிக்குப் பிந்தைய எழுச்சியும் மறுமலர்ச்சியும் 1949-இல் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டபோது, 80 சதவீத சீன மக்கள் எழுத்தறிவற்றவர்களாக இருந்தனர். சராசரி பள்ளிப்படிப்பு வெறும் 1.6 ஆண்டு கள் மட்டுமே. 140 கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் வெறும் 205 உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. புரட்சிக்குப் பின்னர், கம்யூனிச அரசின் உறுதியான அர்ப்பணிப்பால் கல்வி தேசியமயமாக்கப்பட்டது. எளி மைப்படுத்தப்பட்ட சீன எழுத்துகள் அறி முகப்படுத்தப்பட்டு, வயது வந்தோ ருக்கான எழுத்தறிவுப் பிரச்சாரங்கள் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக் கப்பட்டன. 1966 முதல் 1976 வரை நடந்த கலாச்சாரப் புரட்சியின் விளைவாக ஏற்பட்ட கல்வித் தேக்கத்தைச் சரிசெய்ய, 1978-இல் பொ றுப்பேற்ற டெங் சியோ பிங் ‘போலுவான் ஃபான்ஷெங்’ (குழப்பத்தை நீக்கி இயல்பு நிலைக்குத் திரும்புதல்) என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். இது சீன வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பழைய தவறுகள் சரிசெய் யப்பட்டு, பொருளாதாரச் சீர்திருத்தங்க ளுக்கு ஏற்ப கல்வி முறையில் புதிய ஒளியைப் பாய்ச்சியது. 1949-இல் 20% ஆக இருந்த எழுத்தறிவு விகிதம், 2020-இல் 97% ஆக உயர்ந்தது. சராசரி பள்ளிப் படிப்பு 10.8 ஆண்டுகளாக அதிகரித்தது. உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வியின் பிரம்மாண்ட வளர்ச்சி சீனாவின் உயர்கல்வி வளர்ச்சி என்பது உலக நாடுகளை வியக்க வைக்கும் ஒன்றாகும். உயர்கல்விச் சேர்க்கை விகிதம் 0.26 சதவீதத்திலிருந்து 54.4 சதவீதமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று சீனா 3.28 கோடி மாணவர்களு டன் உயர்கல்வியில் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. சீனப் பல்கலைக்கழகங்கள் வெறும் பட்டங்களை வழங்கும் இடங்களாக இல்லாமல், அடிப்படை ஆராய்ச்சியின் முதுகெலும்பாகவும், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் ஊற்றாகவும் திகழ்கின் றன. பெய்ஜிங் ஜியாடோங், ஷாங்காய் ஜியாவோ டோங், ஃபுடான் மற்றும் வுஹான் போன்ற பல்கலைக்கழகங்கள் விண் வெளி அறிவியல், பெட்ரோ கெமிக்கல் மற்றும் கணினி அறிவியலில் உலகத் தரம் வாய்ந்த வல்லுநர்களை உருவாக்கு கின்றன. குறிப்பாக, 2024-ஆம் ஆண்டில் மூன்றாம் நிலைக் கல்வியில் (Tertiary Education) 4.84 கோடி மாண வர்கள் பயில்கின்றனர். மேலும், சோங்கிங் தகவல் தொழில் நுட்ப தொழிற்கல்லூரி போன்ற நிறு வனங்கள் மூலம் தொழில்துறைக்குத் தேவையான நிபுணர்களை உருவாக்கு வதில் சீனா கவனம் செலுத்துகிறது. 11 லட்சம் முதுகலை மாணவர்களும், 1.5 லட்சம் முனைவர் பட்ட ஆய்வாளர்களும் அடங்குவர் என்பது சீனாவின் அறிவு சார் வலிமையைக் காட்டுகிறது. இந்தப் பல்கலைக்கழகங்கள் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களின் நேரடி மேற்பார்வையில் சமூகத் தேவைக ளுக்கேற்ப நிர்வகிக்கப்படுகின்றன. அரசின் நிதி உதவியும் சோசலிச இலக்கும் வறிய பின்னணி கொண்ட மாணவர் கள் உயர்கல்வியைத் தொடர சீனம் தாரா ளமான நிதி உதவிகளை வழங்குகிறது. தேசிய உதவித்தொகைகள், குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களுக்கான சிறப்பு மானியங்கள் (ஆண்டுக்கு 3,700 யுவான் வரை உயர்வு), மற்றும் 25,000 யுவான் வரையிலான தாராளமான கல்விக் கடன்கள் ஆகியவை மாண வர்களின் நிதித் தடையை நீக்குகின்றன. 2024-இல் கல்விக்காகச் சீனா ஒதுக்கி யுள்ள நிதி 4.21 டிரில்லியன் யுவான். இது முந்தைய ஆண்டை விட 2% அதிகம். கல்வியைச் சமூக மாற்றத்திற்கான கருவியாகச் சீனம் பயன்படுத்துகிறது. “பல்கலைக்கழகங்கள் புதுமையான விளைவுகளை உருவாக்குவது மட்டு மல்லாமல், உயர்தரத் திறமையாளர்க ளையும் வளர்த்து சமூகத்திற்குச் சேவை செய்கின்றன” என்று சீனக் கல்வி அமைச்சர் டாக்டர் ஹுவாய் குறிப்பிடுவது போல, தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் கல்வித்துறை முதுகெலும் பாக உள்ளது. பிரம்மாண்டமான மக்கள் தொகை யை ஒரு சுமையாகக் கருதாமல், அதை ஒரு பிரம்மாண்டமான “மனித வளமாக” (Human Resource) மாற்றியதே சீனச் சோசலிசத்தின் மாபெரும் வெற்றியா கும். ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கிச் சீரழிந்த ஒரு தேசம், இன்று அறிவியலால் உலகை வழிநடத்துவது அனைத்து ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் ஒரு சிறந்த பாடம். இது ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு எதிராக அறிவுசார் வலி மையே சிறந்த ஆயுதம் என்பதை உல கிற்கு உணர்த்துகிறது. கல்வியின் மூலம் சீன மக்கள் அடைந்துள்ள இந்த உயர்வு, ஒரு நவீன சோசலிச சமுதாயத்தின் கல்வித் தரத்திற்குச் சான்றாகத் திகழ்கிறது.</p>
