பல்கலை.,- கல்லூரி ஆசிரியர் அமைப்புகள் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாடு மதுரையில் இன்று துவங்குகிறது
20 Feb 2026, 2:39 pm
<p><strong>பல்கலை.,- கல்லூரி ஆசிரியர் அமைப்புகள் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாடு மதுரையில் இன்று துவங்குகிறது</strong></p>
<p>மதுரை, பிப்.20- அகில இந்திய பல்கலை க்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாடு மூன்று நாள் மதுரையில் இன்று துவங்கு கிறது. இதனை முன்னிட்டு மாநாட்டு ஏற்பாடுகள் மற்றும் தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மதுரை மூட்டா அலுவலகத்தில் வெள்ளி யன்று நடைபெற்றது.மூட்டா பொதுச் செயலாளர் ஏ. டி. செந்தாமரைக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசி ரியர்களுக்கு அரசாணை எண் 5 (உயர்கல்வித்துறை, 11.01.2021) இன்படி வழங்கப் பட வேண்டிய சட்டப்பூர்வ பணிமேம்பாட்டு ஊதியம் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் உள்ளது.பணிமேம்பாட்டு ஊதியத்தையும் நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும் என தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வரு கிறோம். அரசுக் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு இடையே பாகுபாடு காட்டப் படுவது ஏற்றுக்கொள்ள முடி யாதது. உடனடியாக அனை வருக்கும் பணிமேம்பாட்டு பலன்கள் வழங்கப்பட வேண்டும். பல கட்டப் போராட்டங்கள் அறிவிப்பு பிப்ரவரி 24 அன்று கல்லூரி வாயில்கள் முன் மனிதச் சங்கிலி, பிப்ரவரி 26 அன்று இணை இயக்குநரி டம் ஆணை நகல் திருப்பி அளித்தல், பிப்ரவரி 28 அன்று சாலை மறியல், மார்ச் 5 முதல் சென்னை கல்லூரிக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டம் என்று ஏயுடி - மூட்டா ஆகி யவை சார்பில் அறிவித்துள் ளோம் .இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொள்ள இருக்கின் றார்கள். உயர்கல்வித் துறை அமைச்சர் 02.02.2026 அன்று நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது விரைவில் நல்ல செய்தி வழங்கப்படும் என உறுதியளித்தார். இதுவரை நடைமுறை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அகில இந்திய அளவில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. மதுரை அமெ ரிக்கன் கல்லூரி வளா கத்தில் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கல்வி யாளர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளு மன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்திய உயர் கல்வி துறையில் நிலவும் பிரச்சனைகள் குறித்து விரி வான ஆலோசனைகள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரி வித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது ஏயுடி பொதுச் செயலா ளர் சேவியர் செல்வகுமார், மூட்டா துணைத்தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.</p>
