புதிர் விளையாட்டு
10 Jan 2026, 12:25 pm
<p> <strong>புதிர் விளையாட்டு</strong></p>
<p>மஞ்சு குழந்தைகளிடம் பெரியவர்கள் கேட்டு மகிழ்வதற்கு மட்டுமல்ல, பெரிய வர்களிடம் குழந்தைகளும் கேட்டு அவர் கள் பதில் சொல்ல முடியாமல் திணறு வதைப் பார்த்துச் சிரிப்பதற்கும் புதிர் விளையாட்டு மிகவும் உதவியாக இருக் கும். இதுவரை நாம் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிர்தான் பார்த்தோம். இன்றைக்குக் கொஞ்சம் மாறுதலாக, ஒரே சொல்லில் பதில் சொல்லக்கூடிய ஐந்து குட்டிக்குட்டி கேள்விகளைச் சந்திப்போம், சரியா? முத லிலேயே விடையைப் பார்க்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். அது எது? அது எப்பவும் மேலேயிருந்து கீழே தான் விழும், கீழேயிருந்து மேலே போகாது. அது எது? எதுன்னாலும் கொஞ்சமா இருக்கி றதை விட, நிறையா இருந்தா நம்மால் பார்க்க முடியும்தானே? ஆனால் அது எவ்வளவுக்கு எவ்வளவு நிறையா இருக்கோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம பார்க்க முடியாது, அது எது? அது எந்த ஊருக்கும் போகும். உலகம் பூராவும் பயணம் பண்ணும். ஆனால் எப்ப வும் மூலையிலேயேதான் இருக்கும். அது எது? அதுக்கு ஒரே ஒரு காதுதான் இருக்கும், ஆனால் எதையும் கேட்க முடியாது. அது எது? அது கண்ணால பார்க்க முடியாத அள வுக்கு இறகை விட லேசானது. ஆனால் எவ்வளவு வலிமையான ஆளாக இருந்தா லும் அதை ரொம்ப நேரம் நிறுத்திவைக்க முடியாது. அது எது? </p>
