முந்தய பக்கம்

சிபிஎம் போராட்ட அறிவிப்பு எதிரொலி சாலை அமைக்க முன் வந்த நிர்வாகம்

24 Dec 2025, 4:16 pm
சிபிஎம் போராட்ட அறிவிப்பு எதிரொலி சாலை அமைக்க முன் வந்த நிர்வாகம்
<p><strong>சிபிஎம் போராட்ட அறிவிப்பு எதிரொலி சாலை அமைக்க முன் வந்த நிர்வாகம்</strong></p> <p>நாமக்கல், டிச.24- சிபிஎம் போராட்ட அறிவிப்பின் காரணமாக மூன்று ஆண்டுகளாக அமைக்கப்படாத சாலைப் பணிகளை &nbsp;உடனடியாக சாலை அமைத்துத் தருவ தாக உள்ளாட்சி நிர்வாகம் உறுதியளித் தது. நாமக்கல் அருகே புதுசத்திரம் ஒன்றி யம், ஏலூர் கிராமத்தில் பிள்ளையார் கோவில் அருகில் காங்கிரீட் சாலை அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து பூமி பூஜை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இச்சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் என &nbsp;மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார &nbsp;வளர்ச்சி அலுவலர் சட்டமன்ற உறுப்பி னர் என எல்லோருக்கும் மனுக்கள் அளித்து எந்த நடவடிக்கையும் இல்லாத &nbsp;சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் காத்திருக் கும் போராட்டம் நடைபெறுமென அறி விக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சத்திரம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5 ஆவது &nbsp;வார்டு உறுப்பினர் ஜோதிமணி வட்டார &nbsp;வளர்ச்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை &nbsp;நடத்தி உடனடியாக சாலை அமைத்து &nbsp;தருவதாக உறுதியளித்தனர். பேச்சுவார்த்தையின் போது வட்டார &nbsp;வளர்ச்சி அலுவலர் சுதா, வட்டார பொறி யாளர் சாந்தி, முன்னாள் ஊராட்சி மன்ற &nbsp;தலைவர் யோகபிரியா, ஊராட்சி மன்ற &nbsp;தனி அலுவலர் மாதையன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram