தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்கேன் இந்தியா

9 Dec 2025, 4:25 pm
ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

கோடிகள்..?

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட
பிளவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி றது. ஒன்றிய அரசுதான் அந்தப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியது. வடிவம், அளவு உள்ளிட்டவற்றையும் ஒன்றிய அரசு தான் முடிவு செய்தது. பணி நடந்து கொண்டி
ருந்தபோதே, சாலையில் பிளவு ஏற்பட்ட தோடு, சாலையோரச் சுவரும் சரிந்து விழுந்திருக்கிறது. கட்டுமானப் பணியின் தரம் குறைவுதான் காரணமாக இருக்க முடியும் என்று அப்பகுதியினர் அதிருப்தி தெரி
வித்துள்ளனர். சம்பவம் நடந்தவுடன் மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ், உடனடியாகத் தலையிட்டிருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பும் இதுபோன்ற நிகழ்வு ஒன்று நடந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த கொல்லம் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் மதிப்பீடு 1,385 கோடி ரூபாயாம்.
வேலை நிறுத்தம்
இண்டிகோ விமான நிறுவனத்தின் “வேலை
நிறுத்தத்தால்” பயணிகள் பாதிக்கப்
படுகையில், மற்ற விமானங்கள் கட்ட ணங்களை ஏற்றிவிட்டன. அப்படியெல்லாம் கட்டணங்களை ஏற்றக்கூடாது என்று
கூறி, கி.மீ. வாரியாக கட்டணங்களை நிர்ண யிப்பதாக ஒன்றிய அரசு சனிக்கிழமையன்று கூறியது. ஆனால், ஞாயிறன்றும் (டிச.7) பிரச்சனை தொடர்ந்தது. ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து பெங்களூருக்கு 60 ஆயிரம் ரூபாய் கேட்டிருக் கிறார்கள். சரி.. அவ்வளவு கொடுக்காமல் தில்லிக்குப் போய் விடலாம் என்று நினைத்தால், அதற்கு 54 ஆயிரம் ரூபாய் கேட்டு திடுக்கிட வைத்திருக்கிறார்கள். மண
மகன்கள், மணப்பெண்கள், நேர்முகத்
தேர்வுக்குச் செல்பவர்கள், வெளிநாடு களுக்குத் திரும்புபவர்கள் என்று பாதிக்கப்
பட்டவர்களின் வரிசை நீண்டு கிடக்கிறது. அதெல்லாம் கூடாது என்று ஒன்றிய அரசு
எதிர்க்குரல் எழுப்புவது போலத் தெரிந்தா லும், விமானிகள் மற்றும் ஊழியர்களைப் பாது
காக்கும் விதியை நீக்க சம்மதித்து விட்டார்கள்.

பலிகடா

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் அரசு நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சி தோல்வியுற்றது. அந்த விவகாரத்தில் மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் நேரத்தில் ஆளும் கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயரைப் போக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்தார்கள். அதன்படி, அந்த நிலத்தைப் பதிவு செய்த சார்பதிவாளர், பதிவு செய்வதற்காக யார் பெயருக்கு அதிகாரம் தரப்பட்டிருந்ததோ அவர் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஆனால், துணை முதல்வரின் மகன் சுதந்திரமாக வலம் வருகிறார். அரசு ஊழியர்கள் மற்றும் இன்னும் சிலரைக் கைது செய்து அவர்களைப் பலிகடா ஆக்குவதற்கான முயற்சிகள்தான் நடக்கின்றன என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்களுடன்...

மேற்குவங்கத்தில் கீதை வாசிப்பு என்ற பெயரில் பாஜகவின் அரசியல் பிரச்சாரம் நடந்திருக்கிறது. அம்மாநில ஆளுநரும், கட்சித்தலைவர்களும் அந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். பெரும் பணத்தைச் செலவு செய்து இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. ஒன்றிய அரசின் சாதனைகள் அல்லது மாநிலத்திற்கு ஒன்றிய அரசு செய்த நல்ல விஷயங்கள் என்று எதுவுமே இல்லாததால் மத உணர்வுகளைத் தூண்டி விடுவதன் மூலம் வாக்குகளைப் பெற பாஜக முடிவு செய்திருக்கிறது. மறுபுறம், சிறுபான்மையினரை மத ரீதியாக திரட்ட திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. இதே வேளையில், மக்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து, அவற்றிற்கான என்ன தீர்வுகளை முன்வைக்கிறோம் என்று சொல்லி, ஆயிரம் கி.மீ. பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வருகிறது. இதில் பெருந்திரளாக மக்கள் பங்கேற்கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.