குமரி எல்லையில் குருசுமலை 69வது திருப்பயணம் துவங்கியது
16 Mar 2026, 4:46 pm
<p><strong>குமரி எல்லையில் குருசுமலை 69வது திருப்பயணம் துவங்கியது </strong></p>
<p>அருமனை, மார்ச். 16- கன்னியாகுமரி மாவட்டம் எல்லைப் பகுதியான பத்துகாணி குருசுமலையில் 69 வது திருப்பயண திருவிழா துவங்கியது. பத்துகாணி அடுத்த கொண்டைக்கட்டி மலையில் குருசுமலை அமைந்துள்ளது. இங்கு மார்ச் 15 முதல் 22 வரை திருப்பயண திருவிழா நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து புனித வெள்ளி அன்று திருப்பயணம் மற்றும் நிகழ்வுகள் நடைபெறுகிறது. குருசுமலை குமரி மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந்தாலும் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வெள்ளறடை பகுதி குருசு மலையின் அடிவாரமாகும். மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆலயத்திலிருந்து நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 3000 அடி உயரமுள்ள மலை உச்சிக்குச் சென்று அங்கு இருக்கின்ற குருசுமலை ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் கேரளா மற்றும் குமரி மாவட்டத்திலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு புனித துதி வணக்கத்துடன் இந்நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. மாலையில் நடைபெற்ற துவக்க விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு நெய்யாற்றிங்கரை மறை மாவட்ட ஆயர் டாக்டர்.செல்வராஜன் தாசன் தலைமைதாங்கினார். தென்குருசுமலை இயக்குனர் டாக்டர். வின்சென்ட் கே.பிட்டர் துவக்க உரையாற்றினார். கேரளா உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் ஜி .ஆர். அனு, தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பாறசாலை சட்டமன்ற உறுப்பினர் சி. கே. ஹரீந்திரன், கோவளம் சட்டமன்ற உறுப்பினர் எம். வின்சென்ட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருவிழாவில் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் கலந்து கொண்டனர்.</p>
