தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

60 ஆண்டு காலப் போராட்டம் வெற்றி கும்மிடிப்பூண்டி நெறிக்குறவர் இன மக்களுக்குக் குடியிருப்பு பட்டா வழங்கல்

14 Feb 2026, 4:33 pm
60 ஆண்டு காலப் போராட்டம் வெற்றி கும்மிடிப்பூண்டி நெறிக்குறவர் இன மக்களுக்குக் குடியிருப்பு பட்டா வழங்கல்
<p><strong>60 ஆண்டு காலப் போராட்டம் வெற்றி கும்மிடிப்பூண்டி நெறிக்குறவர் இன மக்களுக்குக் குடியிருப்பு பட்டா வழங்கல்</strong></p> <p>திருவள்ளூர், பிப் 14- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி 11-வது வார்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 21 நெரிக்குறவர் குடும்பங்கள், தங்க ளுக்குப் பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்துடன் இணைந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். சாதிய வன்மம் கலந்த புகார்கள் மற்றும் நிர்வாகத் தாமதங்களைக் கடந்து, பிப்ரவரி 16-ம் தேதி அறிவிக்கப்பட்ட &ldquo;காத்திருப்புப் போராட்டம்&rdquo; காரணமாக வருவாய்த்துறை விரைந்து செயல்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளி யன்று (பிப்.13) வட்டாட்சியர் முன்னிலை யில் 17 குடும்பங்களுக்குப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. 60 ஆண்டு காலக் கனவு நனவானதை இனிப்பு வழங்கியும், சங்கத் தலைவர்களுக்குப் பாசிமணி மாலை அணிவித்தும் மக்கள் கொண்டாடினர். மீதமுள்ள 4 குடும்பங்களுக்குப் பட்டா வழங்குதல், தொகுப்பு வீடுகள், மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தரவும், தங்களுக்கு எதிராகச் சாதிய வன்மத்தைத் தூண்டுவோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாவட்ட குழு உறுப்பினர் வி.அஜித், கிளை நிர்வாகிகள் சாந்தி, பத்மினி, பாலாஜி, சிபிஎம் வட்டச் செய லாளர் டி.கோபாலகிருஷ்ணன், வட்டக் குழு உறுப்பினர்கள் ப.லோகநாதன், எம்.சிவக்குமார், வி.ஜோசப், வி.குப்பன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.