தமிழ்நாடு அறிவியல் இயக்க 23-ஆவது மாநில மாநாடு சிவகாசியில் துவங்கியது
31 Jan 2026, 3:56 pm
<p><strong>தமிழ்நாடு அறிவியல் இயக்க 23-ஆவது மாநில மாநாடு சிவகாசியில் துவங்கியது</strong></p>
<p>அறிவியல் மக்களுக்கே, அறிவியல் நாட்டிற்கே, அறிவியல் சுயசார்பிற்கே” என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 23-ஆவது மாநில மாநாடு சிவகாசியில் வெள்ளியன்று எழுச்சியுடன் துவங்கியது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன், எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், வங்கி ஊழியர் சங்கத் தலைவர் தாமஸ் பிராங்கோ, அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர்கள் ஆர். இராமானுஜம், கே.பாண்டியம்மாள், மாணிக்கத்தாய், எஸ்.அனுரத்னா, மன்னை சேதுராமன், மாநிலச் செயலாளர் எஸ்.பரமசிவம், முன்னாள் பொதுச் செயலாளர்கள் ராஜமாணிக்கம், ஏ. அமலராஜன், முன்னாள் மாநிலத் தலைவர் என். மணி, பி.ரவீந்திரன் எம்.சுந்தரராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
