தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் 22 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா

29 Jan 2026, 5:39 pm
தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் 22 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா
<p><strong>தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் 22 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா</strong></p> <p>திருப்பூர், ஜன.29- 22 ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழா லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட அரங்கங்களுடன், தலைவர்க ளுடன் புகைப்படம் எடுக்கும் செல்பி &nbsp;பாயிண்ட், மகளிர் குழுக்கள் உற்பத்தி &nbsp;செய்யும் விற்பனை அரங்கங்கள், குழந் தைகளை மெய்சிலிர்க்க வைக்கும் &nbsp;விஆர், உணவு கூடங்கள் என தினந்தோ றும் பல்லாயிரக்கணக்கானேரை ஈர்த்து &nbsp;வருகிறது. &nbsp;தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட &nbsp;நிர்வாகம், பொது நூலகத்துறையுடன் இணைந்து திருப்பூர் பின்னல் புக் &nbsp;டிரஸ்ட் நடத்தும் 22 ஆவது திருப்பூர் புத்த கத் திருவிழா திருப்பூர் காங்கேயம் ரோடு வேலன் ஹோட்டல் மைதானத் தில் நடைபெற்று வருகிறது. ஜன.24 ஆம் &nbsp;ஆம் தேதி தொடங்கிய இந்த புத்தக &nbsp;கண்காட்சி பிப்ரவரி 3 ஆம் தேதி வரை 11 &nbsp;நாட்கள் நடைபெற உள்ளது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 9.30 &nbsp;மணி வரை பார்வையாளர்கள் பார்வை யிட்டு புத்தகங்கள் வாங்கி செல்கின்ற னர். இக்கண்காட்சியில் 151 அரங்கங் கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத் தின் முன்னணி புத்தக பதிப்பகங்கள், &nbsp;விற்பனையாளர்கள் பங்கேற்றுள்ள னர். இதில், அறிவியல், இலக்கியம், வர லாறு, அரசியல், சுயமுன்னேற்றம் உள் பட பல்வேறு தலைப்புகளில் ஏராள மான புத்தகங்கள் கொண்டுவரப்பட் டுள்ளன. &nbsp;அனைவரையும் ஈர்க்கும் செல்பி பாயிண்ட்: திருவள்ளுவர், புரட்சியாளர் பகத் சிங், மகாத்மா காந்தி, பெரியார், அம் பேத்கர், அண்ணா, பாரதியார், கலை ஞர் உள்ளிட்ட தலைவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள் ளும் வகையில் உருவ படங்கள் வைக் கப்பட்டுள்ள செல்பி பாயின்ட் அமைக் கப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சியின் நோக்கத்தை பிரதிபலிக்கும் வகை யில் அறியாமை என்னும் இருள் அகற்ற &nbsp;அறிவுத் தீ பரவட்டும் என்ற வாசகத்து டன் அமைக்கப்பட்டுள்ள இந்த செல்பி &nbsp;பாயிண்டில் கண்காட்சிக்கு வரும் அனைவரும் ஆர்வத்துடன் புகைப்ப டம் எடுத்து செல்கின்றனர். &nbsp;குழந்தைகளை கவரும் காமிக்ஸ்: வார்த்தைகளையும், ஓவியங்களை யும் இணைத்து சித்திரங்களை தொகுத்து கதைகளை உருவாக்கும் வடிவத்திற்கு காமிக்ஸ் என்று பெயர். இதற்கென்றே &nbsp;பிரத்தேயக மொழி உள் ளது. கேப்சன், ஸ்பீச் பலூன் என ஒவ் வொரு எழுத்து உள்ள வட்டமே அந்த &nbsp;கதாபாத்திரம் எந்த உணர்ச்சியை வெளி படுத்துகிறது என சொல்லிவிடும். &nbsp;எடுத்துகாட்டுக்கு &nbsp;ஒரு வட்டத்திற்குள் எழுதப்பட்டால் அது சாதாரணமாக பேசும் வசனம். அதுவே ஸ்டார் வடிவில் வட்டத்திற்குள் எழுதப்பட்டிருந்தால் அது கத்துவது என பொருள். இப்படி &nbsp;வடிவத்தில் உணர்ச்சி கடத்தப்படுகி றது. முதலில் காமிக்ஸ் வடிவத்தில் வெளிவந்த கதைகள் சூப்பர் மேன், &nbsp;ஸ்பைடர் மேன், பேட்மேன் போன்ற &nbsp;திரைபடங்களாக தற்போது கோலோட்சி வருகின்றன. இந்த புத்தக &nbsp;கண்காட்சியில் ஆங்கிலத்தில் இருந்து &nbsp;தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட காமிக் ஸ்கள், தமிழில் உருவாக்கப்பட்ட காமிக் ஸ்கள் என பிரத்தேகமாக &nbsp;காமிக்ஸ்க ளுக்கு என்று அரங்கம் அமைக்கப்பட் டுள்ளது. பள்ளி குழந்தைகள் ஆர்வமு டன் வந்து வாங்கி செல்கின்றனர். மகளிர் உற்பத்திப்பொருளும்; விற்பனையும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் &nbsp;சுய உதவிக்குழுக்களின் விற்பனை &nbsp;மற்றும் கண்காட்சி அமைக்கப்பட்டுள் ளது. இதில் பல்வேறு ஊராட்சிகள், நக ராட்சிகளில் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் விற் பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பைகள், சைன், வளையல், கைத்தறி &nbsp;புடவைகள், உணவுப் பண்டங்கள் விற் பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் &nbsp;தங்கள் வாழ்வாதாரம் மேம்படுவதா கவும், இதுபோன்ற கண்காட்சிகள், முகாம்களுக்கு சென்று விற்பனை செய்ய அரசு உதவுவதாகவும் மகளிர் சுய உதவி குழுக்கள் உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதேபோல் மீன்வளம் மற்றும் மீன வர் நலத்துறை சார்பில் மீன்வள மேம் பாட்டு திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் அரங்கம், &nbsp;பள்ளி மாணவர்கள் செய்த மாதிரிகளை காட்சிப்படுத்தும் வகையில் பள்ளி &nbsp;கல்வித் துறை சார்பில் அரங்கம், &nbsp;காச நோய் இல்லா தமிழகத்திற்கான பிரச்சா ரத்தை மேற்கொள்ளும் வகையில் மருத் துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் அரங்கம், திருப்பூர் மாநக ராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை &nbsp;குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் அரங்கம், &nbsp;பொது நூலகத்துறை சார் பில் வரலாறை வி ஆர் காட்சியில் காணும் வகையில் அரங்கம், சிறை கைதிகளுக்கு புத்தகம் தானம் செய்யும் &nbsp;அரங்கம் என பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தினந் தோறும் மாலையில் கருத்தரங்கங்கள் &nbsp;நடைபெறுகிறது. இந்த புத்தகக் &nbsp;கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கா னோர் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.