பழங்குடி மக்களின் 20 ஆண்டு கால சட்டப் போராட்டம் வெற்றி!
13 Feb 2026, 3:55 pm
<p><strong>பழங்குடி மக்களின் 20 ஆண்டு கால சட்டப் போராட்டம் வெற்றி!</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, பிப். 13 - கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை யில் உள்ள வாழப்பூண்டி கிராமத்தில் வசிக்கும் ஏழைப் பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்த தொழிலதிபர்களுக்கு எதிராக, சென்னை உயர்நீதி மன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கி யுள்ளது. 2007-ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளாக நடை பெற்று வந்த இந்தச் சட்டப் போராட்டத்தில், பழங்குடி மக்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைத் துள்ளது. நில அபகரிப்பும் போராட்டமும் வாழப்பூண்டி கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் பட்டா நிலங் களை, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விஸ்வநாதன் கந்தையா உள்ளிட்ட 5 பேர், மக்க ளின் அறியாமையைப் பயன்படுத்தித் தங்கள் பெய ரில் பத்திரம் செய்து கொண்டனர். அத்துடன், அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக விவசாயம் செய்து வந்த 150 ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்து, காபி, மிளகு, ரப்பர் உள்ளிட்ட பண்ணைகளை அமைத்தனர். இதனை எதிர்த்து, 2007-ஆம் ஆண்டு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்தவரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தற்போதைய மாநிலச் செயலாள ருமான பெ. சண்முகம் தலைமையில் ஆயிரக்கணக் கான மக்கள் பங்கேற்ற நில மீட்புப் போராட்டம் நடைபெற்றது. நீதிமன்றத் தீர்ப்புகள் சங்கராபுரம் உரிமையியல் நீதிமன்றம் விஸ்வ நாதன் கந்தையா உள்ளிட்டோர் பெற்ற கிரயம் செல்லாது என்றும், அரசு நிலங்களில் அவருக்கு உரிமை இல்லை என்றும் தீர்ப்பளித்தது. மேல் முறையீட்டு வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றம் உறுதி செய்தது. தற்போது, சென்னை உயர் நீதிமன்றமும் வெள்ளியன்று (பிப். 13) விஸ்வநாதன் கந்தையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, முந்தைய இரண்டு நீதிமன்றங்களின் தீர்ப்பு களையும் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! இந்த நீண்டகாலப் போராட்டத்தில் கள்ளக் குறிச்சி வழக்கறிஞர் வி. ராஜா மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் காரல் மார்க்ஸ் ஆகி யோர் ஆஜராகி வாதிட்டனர். தொழிலதிபர்களின் ஆட்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் போடப்பட்ட பொய் வழக்குகளை எதிர்கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் மலை வாழ் மக்களும் உறுதியுடன் நின்றதற்குப் பலனாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. சிபிஎம் கோரிக்கை இந்நிலையில், நீதிமன்றத் தீர்ப்பின் அடிப் படையில், தமிழ்நாடு அரசும் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகமும் பின்வரும் நடவடிக்கை களை உடனடியாக எடுக்க வேண்டும் என மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி. ஜெயசங்கர் வலியுறுத்தியுள்ளார். விஸ்வநாதன் கந்தையா பெயரில் உள்ள பட்டா எண் 47 மற்றும் 236-ஐ உடனடியாக ரத்து செய்து, அந்த நிலங்களை மலைவாழ் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். அரசுப் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை உட னடியாக வெளியேற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட 69 மலைவாழ் குடும்பங்களுக்கும் அந்த நிலங்களுக் கான இலவச நிலப்பட்டா வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.</p>
